நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .

டி.சந்ரு

நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .
தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக நுவரெலியாவில் இயங்கி வரும் அசர மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
குறிப்பாக அரச மற்றும் தனியார் ஊழியர்களிடம் மாதாந்தம் முறையற்ற வகையில் வரி அறவிடுவதினை எங்கலால் ஏற்க முடியாது என தெரிவித்து புதிய வரி அறவீட்டுக்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் பின்னர் உரிய தீர்வொன்று கிடைக்காவிடின் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக ஊழியர்கள் எச்சரித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *