நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட கல்கந்தவத்த பாடசாலையின் அதிபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு சிரமப்படும் , கல்வி சார் செயற்பாடுகளிலும் திறமையாக செயற்படும் மற்றும் தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளிக்கும், மாணவர்களுக்கு லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வானது, 2023.03.22 செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலையின் அதிபரின் தலைமையில் நடைப்பெற்றது. இந் நிகழ்வின் போது ஒவ்வொரு வகுப்பிலும் 5 மாணவர்கள் வீதம், தரம் 1 தொடக்கம் 5 ஆம் தரம் வரையிலுள்ள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாளர் தியாகராஜா யுவராஜன், செயற்திட்ட ஒருக்கிணைப்பாளர் சதீஷ் கண்ணா, கலந்துக்கொண்டதுடன் கல்கந்தவத்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.