கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு வெல்லாவெளி- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
வளம் தருவாய் நல்வாழ்வு தருவாய்
மனவுறுதி தந்து என்றும் வாழ்வளிப்பாய்
துணையிருப்பாய், துன்பம் துடைத்தெறிவாய்
வெல்லாவெளி வீற்றிருக்கும் எங்கள் தாயே மாரியம்மா
கேட்ட வரம் தந்தருள்வாய் ஆற்றலையும் தான் தருவாய்
உடல் நலம் தந்திடுவாய் உள நலமும் தான் தருவாய்
துன்பம் தடுத்திடுவாய் தூய மனம் தந்திடுவாய்
வெல்லாவெளி வீற்றிருக்கும் எங்கள் தாயே மாரியம்மா
நோய் நொடிகள் போக்கிடுவாய் நிம்மதியும் தான் தருவாய்
ஏற்கும் பொறுப்பை நிறை வேற்றிடுவாய்
ஏக்கமில்லா நிலை தருவாய் ஏந்தும் நிலை ஒழித்திடுவாய்
வெல்லாவெளி வீற்றிருக்கும் எங்கள் தாயே மாரியம்மா
இயற்கையை வளப்படுத்தி உயிரளிப்பாய்
பசியின்றி வாழவைப்பாய் பட்டினியை ஓட்டிடுவாய்
போட்டி பொறாமைகளை வேரோடு போக்கிடுவாய்
வெல்லாவெளி வீற்றிருக்கும் எங்கள் தாயே மாரியம்மா
வேற்றுமை களைந்திடுவாய் வேதனை போக்கிடுவாய்
ஆறுதல் தந்திடுவாய் அமைதியும் தான் தருவாய்
வீரமும் அளித்திடுவாய் வெற்றியும் தான் தருவாய்
வெல்லாவெளி வீற்றிருக்கும் எங்கள் தாயே மாரியம்மா
நீதியை உறுதி செய்வாய் நேர்மையாய் வாழச் செய்வாய்
நிம்மதி தந்திடுவாய் நிலைத்த நல்வாழ்வையும் அளித்திடுவாய்
எம்வாழ்வு முன்னேற உறுதுணையாய் இருந்திடுவாய்
வெல்லாவெளி வீற்றிருக்கும் எங்கள் தாயே மாரியம்மா.
ஆக்கம்- மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.