வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், அராலி, ஆவாரம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் (நாவலடி அம்மன்) திருக்கோயில்
வட இலங்கை கோயில் கொண்டு வரமளிக்கும் தாயே
வற்றாதவுன் கருணை எமக்கென்றும் வேண்டுமம்மா
வெற்றிகளைத் தந்தெம்மை நிம்மதியாய் வாழச்செய்வாய்
அராலியில் அமர்ந்தருளும் எங்கள் முத்து மாரியம்மா
ஆவாரம்பிட்டி திருநிலத்தை ஆட்சி செய்யும் தாயே
ஆதரவு தந்தெம்மை வாழவைக்க வேண்டுமம்மா
ஆளும் நிலை தந்தெம்மை வாழச்செய்வாய்
அராலியில் அமர்ந்தருளும் எங்கள் முத்து மாரியம்மா
அழகு முகம் கொண்டமர்ந்து அருள் பொழியும் தாயே
அச்சமில்லா மனநிலையைத் தந்தருள வேண்டுமம்மா
அமைதி கொண்ட வாழ்வு தந்து நிம்மதியாய் வாழச்செய்வாய்
அராலியில் அமர்ந்தருளும் எங்கள் முத்து மாரியம்மா
அனைத்துலகும் உன்னருளால் வாழ்விக்கும் தாயே
அனைத் துலக உயிர்களுக்கும் அருள் தர வேண்டுமம்மா
அறநெறியில் வாழுகின்ற வாழ்வு தந்து அமைதியாய் வாழச்செய்வாய்
அராலியில் அமர்ந்தருளும் எங்கள் முத்து மாரியம்மா
அனைத் துயிர்க்கும் தாயாக அன்பு செய்யும் தாயே
ஆற்றல் தந்து எழுச்சியையும் தந்தருள வேண்டுமம்மா
ஆணவம் களைந் தெம்மை அன்புடனே வாழச்செய்வாய்
அராலியில் அமர்ந்தருளும் எங்கள் முத்து மாரியம்மா
மலர் போன்ற திருப் பாதம் கொண்டு சூலம் தாங்கி நிற்கும் தாயே
மாநிலத்தில் நல்லமைதி தந்தருள வேண்டுமம்மா
முன்னேற வழி திறந்து மாண்புடனே வாழச் செய்வாய்
அராலியில் அமர்ந்தருளும் எங்கள் முத்து மாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
