வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம்- முல்லைத்தீவு வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில்
கடல் நீரில் தீபம் ஏற்கும் அற்புதம் நின்ற தாயே
கவனமெல்லாம் எம்மீது வைத்திடுவாய் அம்மா
கவலைகளை மறந்து நாம் நிம்மதியாய் வாழ
கருணை செய்து அருளிடம்மா வற்றாப்பளை கோயில் கொண்ட எங்கள் கண்ணகித் தாயே
நம்பி வந்துன்டி தொழுவோர் நலன் காக்கும் தாயே
நல்லருளைப் பொழிந்தெம்மை வாழவைப்பாய் அம்மா
நாளும் உந்தன் கருணையினால் நாம் நிம்மதியாய் வாழ
கருணை செய்து அருளிடம்மா வற்றாப்பளை கோயில் கொண்ட எங்கள் கண்ணகித் தாயே
வன்னிப் பெருநிலத்தில் வந்துறையும் தாயே
வளமான நிறைவாழ்வை எமக்கருள்வாய் அம்மா
வரும் துன்பம் தடுத்து நாம் நிம்மதியாய் வாழ
கருணை செய்து அருளிடம்மா வற்றாப்பளை கோயில் கொண்ட எங்கள் கண்ணகித் தாயே
நீதியை நிலை நிறுத்த போராடிய தாயே
நீதி நெறி தவறா பெருவாழ்வை எமக்கருள்வாய் அம்மா
நொந்து மனம் வாடாமல் நாம் நிம்மதியாய் வாழ
கருணை செய்து அருளிடம்மா வற்றாப்பளை கோயில் கொண்ட எங்கள் கண்ணகித் தாயே
தமிழ்த் தாயின் தவமகளாய் உதித்தவளே தாயே
தவறில்லா நேர்வழியை எமக்கருள்வாய் அம்மா
தேடி வரும் நன்மைகளைப் பெற்று நாம் நிம்மதியாய் வாழ
கருணை செய்து அருளிடம்மா வற்றாப்பளை கோயில் கொண்ட எங்கள் கண்ணகித் தாயே
தூயமனம் கொண்டவர்கள் துணையிருக்கும் தாயே
துடிப்புமிகு எதிர்காலம் எமக்கருள்வாய் அம்மா
தொல்லையின்றி நாம் நிம்மதியாய் வாழ
கருணை செய்து அருளிடம்மா வற்றாப்பளை கோயில் கொண்ட எங்கள் கண்ணகித் தாயே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.