வடமாகாணம்- வவுனியா மாவட்டம், வவுனியா, இறம்பைக்குளம், அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்மன் திருக்கோயில்
பகையின்றி வளம் சேர வாழ வழி செய்வாய்
பாரினிலே நல்லமைதி நிலைத்திடவும் செய்வாய்
புனிதமிகு பெரு வாழ்வை நாமடையச் செய்வாய்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட நாகபூசணி அம்மா
துன்பநிலை போக்கி எம்மை வழிநடத்திச் செல்வாய்
துயர் அண்டா நிலை நமக்கு கிட்டிடவே செய்வாய்
தொல்லையின்றி நாம் வாழ வழிவகுத்துத் தருவாய்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட நாகபூசணி அம்மா
நோய் நொடிகளின்றி வாழ வழி செய்வாய்
நொந்து மனம் வாடாமல் எமக்கருள் நீ செய்வாய்
நானிலத்தில் நல்லபடி வாழ வழி வகுப்பாய்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட நாகபூசணி அம்மா
வளங்கொண்ட பெருவாழ்வை நாமடையச் செய்வாய்
வறுமையில்லா நிலைதந்து வாழும் வழி செய்வாய்
வெறுமையில்லா நிறைவாழ்வை நமக்குரிமை செய்வாய்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட நாகபூசணி அம்மா
வன்னித் தமிழ் மண்ணை வளங் கொழிக்கச் செய்வாய்
வற்றாத கருணையினை எமக்கென்றும் அருள்வாய்
வெற்றிகள் தந்தெம்மை தலை நிமிரச் செய்வாய்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட நாகபூசணி அம்மா
அறிவுதந்து ஆற்றல் தந்து வாழவழி செய்வாய்
அச்சமின்றி நிம்மதியாய் நிலைத் திருக்கச் செய்வாய்
அச்சம் தரும் பகை கொடுமை அண்டாமல் செய்வாய்
இறம்பைக்குளம் கோயில் கொண்ட நாகபூசணி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.