வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி, பொலிகண்டி, கோயிற்கடவை அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
வட இலங்கைக் கரையினிலே இருந்தருளும் வேலவனே
வாழ்க்கையிலே நிம்மதியை நிறுவிடவே அருளுமைய்யா
விரக்தியண்டா வாழ்வுக்கு உன் கருணை வேண்டுமைய்யா
பொலிகண்டி கோயில் கொண்ட கந்தசுவாமி எமக்கருள்வாய்
அன்புடனே அரவணைத்து வாழ்வு தரும் வேலவனே
ஆதரித்து ஆசிதந்து வாழ்வளித்து அருளுமைய்யா
இன்பம் குன்றா வாழ்வுக்கு உன்கருணை வேண்டுமைய்யா
பொலிகண்டி கோயில் கொண்ட கந்தசுவாமி எமக்கருள்வாய்
நம்பிவந்து தொழுவோரின் நலன் காக்கும் வேலவனே
நாளும் பொழுதும் உடனிருந்து காத்து அருளிடைய்யா
நிம்மதியாய் நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பொலிகண்டி கோயில் கொண்ட கந்தசுவாமி எமக்கருள்வாய்
தொல்லைகள் களைந்து துயர் போக்கும் வேலவனே
தெளிவான மனம் தந்து நல்வழியை அருளிடைய்யா
தேவைகளைப் பெற்று நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பொலிகண்டி கோயில் கொண்ட கந்தசுவாமி எமக்கருள்வாய்
ஆறுமுகங்கள் கொண்டு அருள் வழங்கும் வேலவனே
ஆறுதலைத் தந்தெம்மை வாழவழி அருளிடைய்யா
இல்லையென்ற நிலையின்றி நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பொலிகண்டி கோயில் கொண்ட கந்தசுவாமி எமக்கருள்வாய்
தெய்வானைத் திருமகளை உடன் கொண்ட வேலவனே
தீமைகள் தடுத்தெமக்கு வாழவழி அருளிடைய்யா
தூயவள வாழ்வு நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பொலிகண்டி கோயில் கொண்ட கந்தசுவாமி எமக்கருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.