வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் அருள்மிகு வித்தியா விநாயகர் திருக்கோயில்
வித்தைகளுக் கெல்லாம் அரணாக இருப்பவரே விநாயகரே
சித்திகள் யாவும் பெற்று சீராக வாழவழி தருவாய்
சிந்தையிலே நீயுறைந்து சீராக வழிநடத்து
வவுனியா இருந்தருளும் வித்தியா விநாயகரே
தவறில்லா வழி காட்டி நெறிப்படுத்தும் விநாயகரே
தன்நிலைமை தானுணர்ந்து சீராக வாழ வழி தருவாய்
துணையாக நீயிருந்து சீராக வழிநடத்து
வவுனியா இருந்தருளும் வித்தியா விநாயகரே
கல்வித் தலம் உடன் கோயில் கொண்ட விநாயகரே
கவலையின்றி முன்னேறி வாழவழி தருவாய்
காவலாய் நீயிருந்து சீராக வழிநடத்து
வவுனியா இருந்தருளும் வித்தியா விநாயகரே
வவுனியா நகரினிலே வந்தமர்ந்த விநாயகரே
வளமான எதிர்காலம் தந்தெம்மை வாழவழி தருவாய்
வற்றாத அறிவுதந்து சீராக வழிநடத்து
வவுனியா இருந்தருளும் வித்தியா விநாயகரே
வன்னித் தமிழ் நிலத்தில் காட்சி தரும் விநாயகரே
நல்லுணர்வு எங்கும் நிலைபெற்று வாழவழி தருவாய்
நெஞ்சமதில் நீயமர்ந்து நிம்மதியாய் வழிநடத்து
வவுனியா இருந்தருளும் வித்தியா விநாயகரே
நம்பியுன்னைத் தொழுவோர் தம் நலன் காக்கும் விநாயகரே
நிரந்தரமாய், நிம்மதியாய் வாழவழி தருவாய்
நல்லவர்கள் மனங்களிலே உறைந்திருந்து வழிநடத்து
வவுனியா இருந்தருளும் வித்தியா விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.