மத்திய மாகாணம்- நுவரேலியா மாவட்டம், நுவரேலியா அசோகவனம்- அருள்மிகு ஸ்ரீ சீதை அம்மன் திருக்கோயில்
மலைசூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே கோயில் கொண்ட தேவி
மனிதகுலம் வாழும் நெறி காட்டிடவே உதித்தாள்
வரும் துன்பம் தடுத்திடுவாள் வழிகாட்டி விட்டிடுவாள்
அசோக வனம் வீற்றிருந்து அருள் வழங்கும் சீதை அம்மன்
சிந்தையிலே களங்கம் இல்லா சீர்மைமிகு தேவி
சீராக வாழும் வழி காட்டிடவே வந்தாள்
வரும் துன்பம் தாங்கிடவே மனவுறுதி தந்திடுவாள்
அசோக வனம் வீற்றிருந்து அருள் வழங்கும் சீதை அம்மன்
அழகுமிகு திருவிடத்தில் அமர்ந்தருளும் தேவி
நம்பிக்கை தந்து மனம் நோகாமல் காத்திடுவாள்
துன்பம் வரும்போது அதை எதிர்க்க துணிவும் தந்திடுவாள்
அசோக வனம் வீற்றிருந்து அருள் வழங்கும் சீதை அம்மன்
ஆஞ்சநேயர் இதயத்தில் இடம் கொண்ட தேவி
ஆபத்து வராமல் அரவணைத்துக் காத்திடுவாள்
வந்த துன்பம் போக்கிடுவாள் வரும் துன்பம் நீக்கிடுவாள்
அசோக வனம் வீற்றிருந்து அருள் வழங்கும் சீதை அம்மன்
பூமா தேவியின் புத்திரியாய் அவதரித்த தேவி
பூவுலம் பெருமை பெற வாழ எம்மை வைத்திடுவாள்
நேர்மையுடன் வாழச் செய்வாள் நேர்வழியைக் காட்டிடுவாள்
அசோக வனம் வீற்றிருந்து அருள் வழங்கும் சீதை அம்மன்
தீயசெயல் கொடுமைகளைத் துடைத் தெறியும் தேவி
தொல்லை தரும் தீவினைகள் தடுத்தழிக்க வந்திடுவாள்
தெளிவான அறிவுதந்து நேர்வழியில் வாழச் செய்வாள்
அசோக வனம் வீற்றிருந்து அருள் வழங்கும் சீதை அம்மன்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலை வர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.