ஐரோப்பா – டென்மார்க் நாடு அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயில்
உலகாளும் தாயே அம்மா அபிராமி
உறுதுணையாயிருந்துலகைக் காத்தருள வேண்டும்
துன்ப நிலை அண்டாமல் காத்தருள வருவாய்
டென்மார்க் நாட்டில் கோயில் கொண்ட அபிராமி தாயே அருள்வாய்
தீயபகை சிந்தனைகள் அகற்றி விடும் தாயே அபிராமி
உடனிருந்து உறவுதந்து காத்தருள வேண்டும்
தளராத இன்ப நிலை தந்தருள வருவாய்
டென்மார்க் நாட்டில் கோயில் கொண்ட அபிராமி தாயே அருள்வாய்
அன்பு தந்து ஆதரித்து அரவணைக்கும் தாயே அபிராமி
அச்சமற்ற வாழ்வு தந்து காத்தருள வேண்டும்
மனவலிமை தந்தெம்மை வாழவைக்க வருவாய்
டென்மார்க் நாட்டில் கோயில் கொண்ட அபிராமி தாயே அருள்வாய்
மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்கும் தாயே அபிராமி
மாசண்டா மனம் தந்து காத்தருள வேண்டும்
பெருமை மிகு வாழ்வுதந்து வாழவைக்க வருவாய்
டென்மார்க் நாட்டில் கோயில் கொண்ட அபிராமி தாயே அருள்வாய்
மேற்குலக நாடுதனில் இருந்தருளும் தாயே அபிராமி
மேன்மை மிகு வாழ்வு தந்து காத்தருள வேண்டும்
வலிமைமிகு நல்லுறவுடன் வாழவைக்க வருவாய்
டென்மார்க் நாட்டில் கோயில் கொண்ட அபிராமி தாயே அருள்வாய்
ஆழிசூழ் உலகமெங்கும் அருளுகின்ற தாயே அபிராமி
ஆறுதலாய் நிம்மதியாய் வாழவழி தந்து காத்தருள வேண்டும்
ஆதரவு தருவோரை இணைந்து வாழவைக்க வருவாய்
டென்மார்க் நாட்டில் கோயில் கொண்ட அபிராமி தாயே அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.