மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம்- மாத்தளை, அருள்மிகு ஏழுமுகக் காளியம்மன் திருக்கோயில்
அழகுமிகு திருவிடத்தில் அமர்ந்தருளும் தாயே
அண்டமெல்லாம் உன் கருணை ஒளிர வேண்டும் அம்மா
திக்கின்றித் தவிக்கும் நிலை எவர்க்கும் வேண்டாம்
பார்த்து அருளிடம்மா ஏழு முகக் காளியம்மா
அச்சம் அகற்றியெம்மை ஆட்கொள்ளும் தாயே
ஆற்றல் மிகு உன் அன்பு பெருக வேண்டும் அம்மா
தீங்கின்றி வாழும் நிலை எமக்கென்றும் வேண்டும்
பார்த்து அருளிடம்மா ஏழு முகக் காளியம்மா
சலசலக்கும் அருவி அருகினிலே வீற்றிருக்கும் தாயே
சச்சரவின்றி வாழ உன் அருளைத்தர வேண்டும் அம்மா
தொல்லையில்லா நல்ல நிலை நாமடைய வேண்டும்
பார்த்து அருளிடம்மா ஏழு முகக் காளியம்மா
தீயபகை கொடுமை அழித்து விட அவதரிக்கும் தாயே
துணையிருந்து ஆற்றல்தர வரவேண்டும் அம்மா
துரத்தி வரும் வேதனைகள் தடுத்தருள வேண்டும்
பார்த்து அருளிடம்மா ஏழு முகக் காளியம்மா
மலை சூழ்ந்த பெருநிலத்தில் காட்சி தரும் தாயே
மாண்புடனே நாம் வாழ உன்னருளே வேண்டும் அம்மா
துன்பங்கள் தொடராது தடுத்தருள வேண்டும்
பார்த்து அருளிடம்மா ஏழு முகக் காளியம்மா
தொல்லைகள் போக்கி துணையிருக்கும் தாயே
தோல்வியில்லா வாழ்வை எமக்கென்றும் தர வேண்டும் அம்மா
எழுச்சிமிகு எதிர்காலம் தந்தருள வேண்டும்
பார்த்து அருளிடம்மா ஏழு முகக் காளியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.