வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- நெடுந்தீவு மேற்கு அருள்மிகு ஸ்ரீ நெழுவினி பிள்ளையார் திருக்கோயில்
அலைகடல் சூழ் தீவினிலே கோயில் கொண்ட பிள்ளையார்
அரவணைத்து ஆதரித்து நமக்கருள்வார் நம்பிடுவோம்
துணையிருந்து எம்குறைகள் தீர்த்து அருளிடுவார்
நெடுந்தீவில் உறைகின்ற நெழுவினிப் பிள்ளையார்
வட இலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் பிள்ளையார்
வற்றாத கருணையுடன் எமக்கருள வந்திடுவார் நம்பிடுவோம்
ஏற்ற நலன் தந்து எமக்கருள வந்திடுவார்
நெடுந்தீவில் உறைகின்ற நெழுவினிப் பிள்ளையார்
மகோற்சவம் கண்டு மக்களுக்கு நலமளிக்கும் பிள்ளையார்
துன்பங்கள் போக்கியெம் துயர்களைய உதவிடுவார் நம்பிடுவோம்
எழுச்சிமிகு வாழ்வு தந்து எமக்கருளத் துணையிருப்பார்
நெடுந்தீவில் உறைகின்ற நெழுவினிப் பிள்ளையார்
நம்பித் தொழும் பக்தர்களின் நலன்காக்கும் பிள்ளையார்
நிம்மதியாய் வாழ என்றும் வழியமைப்பார் நம்பிடுவோம்
நிலைப்பான நிம்மதியை நாமடைய அருளளிப்பார்
நெடுந்தீவில் உறைகின்ற நெழுவினிப் பிள்ளையார்
எங்கும் எதிலும் எழுந்தருளும் பிள்ளையார்
என்றும் உடனிருந்து காத்தருள்வார் நம்பிடுவோம்
தொல்லையில்லா வாழ்வு தந்து எமக்கென்றும் துணையிருப்பார்
நெடுந்தீவில் உறைகின்ற நெழுவினிப் பிள்ளையார்
தொல்லை தடுத்தெமது நலன் காக்கும் பிள்ளையார்
தோல்வியில்லா எதிர்காலம் கிட்டச் செய்வார் நம்பிடுவோம்
தெளிவான வாழ்வுதந்து எமக்கென்றும் காப்பளிப்பார்
நெடுந்தீவில் உறைகின்ற நெழுவினிப் பிள்ளையார்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.