வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், தாவடி, அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில்
ஆதரித்து அரவணைத்து ஆற்றல் தரும் தாயே
மன அமைதி தந்திடவே கருணை நீ செய்வாய்
குறைகளைந்து நிறையருள வேண்டும்
தாவடியில் கோயில் கொண்ட பத்திரகாளி அம்மா நீயே சரணமம்மா
வட இலங்கை இருந்தருளும் அம்மா தாயே
வளம் நிறைந்த வாழ்வுதரக் கருணை செய்வாய்
நன்மைகள் நிலைத்திட வேண்டும்
தாவடியில் கோயில் கொண்ட பத்திரகாளி அம்மா நீயே சரணமம்மா
அற்புதங்கள் செய்து அருளளிக்கும் தாயே
அச்சமில்லா நிம்மதியைத் தந்திடவே கருணை செய்வாய்
நிலைத்த நிம்மதியை நாம் பெறவே வேண்டும்
தாவடியில் கோயில் கொண்ட பத்திரகாளி அம்மா நீயே சரணமம்மா
வளங் கொண்ட தமிழ் நிலத்தில் ஆட்சி செய்யும் தாயே
வற்றாத சுக வாழ்வைத் தந்திடவே கருணை செய்வாய்
வெற்றி மிகு எதிர்காலம் நாம் பெறவே வேண்டும்
தாவடியில் கோயில் கொண்ட பத்திரகாளி அம்மா நீயே சரணமம்மா
நிலை குலையா நிம்மதியை அருளுகின்ற தாயே
நேர்மையாய் நாம் வாழக் கருணை செய்வாய்
உளநலமும் உடல் நலமும் நாம் பெறவே வேண்டும்
தாவடியில் கோயில் கொண்ட பத்திரகாளி அம்மா நீயே சரணமம்மா
பயங்கள் தரும் தீவினைகள் அழித்தருளும் தாயே
பதைபதைக்கா நிலை தரவே கருணை செய்வாய்
எப்பிணியும் அண்டா நிலை நாம் பெறவே வேண்டும்
தாவடியில் கோயில் கொண்ட பத்திரகாளி அம்மா நீயே சரணமம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.