வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- புங்குடுதீவு அருள்மிகு இராஜராஜேஸ்வரி (கண்ணகை) அம்மன் திருக்கோயில்
தமிழ்த் தாயின் தவப்பயனாய் வந்துதித்த தமிழ் மகளே
தரணியிலே தமிழ் முழங்க வழியை நீ திறந்திடம்மா
திசையெட்டும் தமிழர் நலன் காத்திடம்மா
புங்குடுதீவில் கோயில் கொண்ட இராஜேஸ்வரி அம்மா நீ அருள்வாய்
ஐந்து பெரும் கோபுரங்கள் கொண்டுறையும் தமிழ் மகளே
அகம்பாவமின்றி நாம் வாழ வழி நீ திறந்திடம்மா
அச்சமின்றி வாழும் நிலை உறுதி செய்திடம்மா
புங்குடுதீவில் கோயில் கொண்ட இராஜேஸ்வரி அம்மா நீ அருள்வாய்
தாயாக இருந்துலகைத் தாங்கி நிற்கும் தமிழ் மகளே
தளராத மனவலிமை தந்து நல்லவழி திறந்திடம்மா
தொல்லையின்றி நாம் வாழ வழியை நீ தந்திடம்மா
புங்குடுதீவில் கோயில் கொண்ட இராஜேஸ்வரி அம்மா நீ அருள்வாய்
மிகப் பெரிய திருக்கோயில் கொண்டுறையும் தமிழ் மகளே
மாண்புமிகு வழிதிறந்து வாழும் வழி திறந்திடம்மா
முயற்சியுடன் முன்னேற வழியை நீ செய்திடம்மா
புங்குடுதீவில் கோயில் கொண்ட இராஜேஸ்வரி அம்மா நீ அருள்வாய்
கண்ணகி அம்மன் என்ற பெயர் கொண்டு அருளும் தமிழ் மகளே
கவலையின்றி வாழும் வழி நல்லவழி திறந்திடம்மா
காவலுடன் நாம் வாழ உரிய வழி அருளிடைய்யா
புங்குடுதீவில் கோயில் கொண்ட இராஜேஸ்வரி அம்மா நீ அருள்வாய்
குடமுழுக்கு கண்டு சிறப்படையும் தமிழ் மகளே
குற்றமில்லா நல்வாழ்வின் வழி திறந்திடம்மா
குவலயத்தில் தலை நிமிர்ந்து நாம் வாழச் செய்திடம்மா
புங்குடுதீவில் கோயில் கொண்ட இராஜேஸ்வரி அம்மா நீ அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.