Kovil

பொலன்நறுவை, அருள்மிகு மாதவன் மாதீஸ்வரம் சிவன் திருக்கோயில்

வடமத்திய மாகாணம்- பொலன்நறுவை மாவட்டம்- பொலன்நறுவை, அருள்மிகு மாதவன் மாதீஸ்வரம் சிவன் திருக்கோயில்

அகிலமெல்லாம் நிறைந்தவரே சிவனார்
அந்த அருளாளர் கருணை எங்கும் நிறைய வேண்டும்
ஆதியந்தம் இல்லாத அருட்கடலாம் அவரே
ஆட்கொண்டு நற்கருணை பேறு வழங்குவார்

பழைமை மிகு தமிழரசர் ஆண்ட மண்ணில்
கோயில் கொண்ட சிவனார்
அன்னவரின் அருள் என்றும் நிலைக்க வேண்டும்
காலமெல்லாம் கருணை செய்து காப்பவனும் அவரே
அருகிருந்து அணைத்து நலன் வழங்குவார்

மாதவன் மாதீஸ்வரம் என்ற நாமம் கொண்ட தலம் அமர்ந்த சிவனார்
மாநிலத்தில் நன்மைகளைப் பெருக்கிவிட வேண்டும்
தளராத நன்மைகளைத் தருபவனும் அவரே
என்றும் உடனிருந்து காவல் வழங்குவார்

இயற்கையையே ஆட்டிநிற்கும் எங்கள் சிவனார்
பொலன்நறுவை திருமண்ணில் மீள எழ வேண்டும்
என்றும் நிலைத்துள்ள உத்தமரும் அவரே
உறுதியுடன் எமக்கென்றும் அருள் வழங்குவார்

பிறப்புக்கும் வாழ்வுக்கும் இறப்புக்கும் பொறுப்பான சிவனார்
வாழ்க்கையை நல்லவழி வழிநடத்திட வேண்டும்
வெற்றிகளைத் தந்தெமக்கு வாழ்வளிப்பவரும் அவரே
வீழ்ந்து விடாநிலை தந்து எழுச்சி வழங்குவார்

தமிழ் மொழியை உலகிற்குத் தந்திட்ட சிவனார்
தடுமாறா நிலை தந்து வாழச்செய்ய வேண்டும்
துணிவுடனே வாழும் நல்ல வழிகாட்டுபவரும் அவரே
பொலன்நறுவையில் கோயில் கொண்ட மாதவன் மாதீஸ்சுவரர் வருங்காலம் வளம்பெறவே அருளிடுவார்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top