வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி அருள்மிகு வாரிவன நாதேச்சரன் (சிவன்) திருக்கோயில்
உயிர்தந்து உறவுதந்து வாழவைக்கும் ஈஸ்வரனே
உண்மையென்றும் மறையாமல் காத்திடவே உதவுமைய்யா
உத்தமராய் நாம்வாழ வழியை நீ தந்திடைய்யா
வாரிவன நாதேசுவரரே உன் கருணை அருளிடைய்யா
வட இலங்கை கோயில் கொண்டு வாழ்வளிக்கும் ஈஸ்வரனே
வற்றாத வளங்கள் தந்து வாழவழி செய்திடைய்யா
வழி தவறிச் செல்லாமல் வாழும் வழி தந்திடைய்யா
வாரிவன நாதேசுவரரே உன் கருணை அருளிடைய்யா
ஆதியும் அந்தமுமில்லா அருட்கடலே ஈஸ்வரரே ஆதரவு தந்தெம்மை அனுதினமும் வாழவைக்க வேண்டுமைய்யா
அறவழியில் நாமென்றும் வழி நடக்க வழி தந்திடைய்யா
வாரிவன நாதேசுவரரே உன் கருணை அருளிடைய்யா
நெஞ்சினிலே நிறைந்துறைந்து நிம்மதி தரும் ஈஸ்வரரே
நிலையான நிம்மதியே தளராமல் இருக்கவழி செய்திடைய்யா
நித்தமும் உன் அருளை எமக்கு நீ தந்திடைய்யா
வாரிவன நாதேசுவரரே உன் கருணை அருளிடைய்யா
கேட்டவரம் தந்தெம்மை ஆட்சி செய்யும் ஈஸ்வரரே
கேடண்டா வாழ்வு தந்து காத்தருள வேண்டுமைய்யா
போற்றும் படி நாம் நடக்க வழி தந்திடைய்யா
வாரிவன நாதேசுவரரே உன் கருணை அருளிடைய்யா
தொழுது நிற்போர் தொல்லைகளைக் களைகின்ற ஈஸ்வரரே
தொல்லையில்லா வாழ்வு தந்து ஏற்றம் தர வேண்டுமைய்யா
தெளிவான அறிவு தந்து ஆற்றலையும் தந்திடைய்யா
வாரிவன நாதேசுவரரே உன் கருணை அருளிடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.