மேல் மாகாணம்- களுத்துறை மாவட்டம்- களுத்துறை நகரம் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்
வேல்தாங்கி உலகாளும் வேலவனே முருகா
வேதனைகள் துடைத்தெறிய மனங்கொள்வாய் ஐயா
வெற்றி நிறை வாழ்வு தந்து வாழவைப்பாய் முருகா
களுத்துறை நகரினிலே கோயில் கொண்ட கந்தா
அழகுமயில் மீதமர்ந்து அருள் வழங்கும் வேலவனே முருகா
ஆற்றல் தந்து அச்சமற வாழவைப்பாய் ஐயா
இன்பம் நிறை வாழ்வு தந்து வாழவைப்பாய் முருகா
களுத்துறை நகரினிலே கோயில் கொண்ட கந்தா
வள்ளி தெய்வானையரை அருகு கொண்ட வேலவனே முருகா
வற்றாத வளவாழ்வை தந்தருள மனங் கொள்வாய் ஐயா
வீரம் நிறை வாழ்வு தந்து வாழவைப்பாய் முருகா
களுத்துறை நகரினிலே கோயில் கொண்ட கந்தா
மேற்கிலங்கை கோயில் கொண்டு அருளுகின்ற வேலவனே முருகா
மேன்மை மிகு வாழ்வினையே தந்தெம்மை வாழச் செய்வாய் ஐயா
முயற்சியுடன் ஆற்றல் தந்து வாழவைப்பாய் முருகா
களுத்துறை நகரினிலே கோயில் கொண்ட கந்தா
சிவனாரின் இளமகனாய் வந்துதித்த வேலவனே முருகா
சிந்தை சீர் பெறவே அருள் தருவாய் ஐயா
சீரான வாழ்வு தந்து வாழவைப்பாய் முருகா
களுத்துறை நகரினிலே கோயில் கொண்ட கந்தா
ஆறுபடை வீடு கொண்ட ஐயனே வேலவனே முருகா
அச்சமில்லா வாழ்வுக்கு வழி அருள்வாய் ஐயா
இவ்வுலகில் நிம்மதியாய் வாழவைப்பாய் முருகா
களுத்துறை நகரினிலே கோயில் கொண்ட கந்தா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
