வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், துன்னாலை வெலிக்கம் தோட்டம் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
வினைதீர்த்து நலமளிக்கும் பிள்ளையார்
வேதனைகள் போக்கியெம்மைக் காத்திடுவார்
நம்பியவரடியைப் பற்றிடுவோம் நன்மைகள் அடையச் செய்வார்
துன்னாலை கோயில் கொண்ட பிள்ளையார்
ஆறுதலைத் தந்தருளும் பிள்ளையார்
அச்சமின்றி வாழும்வழி தந்திடுவார்
நம்பியவரடியைப் பற்றிடுவோம் நிம்மதியை அடையச் செய்வார்
துன்னாலை கோயில் கொண்ட பிள்ளையார்
வெற்றிகள் தரவுடனிருக்கும் பிள்ளையார்
சங்கடங்கள் இன்றி வாழவழி காட்டிடுவார்
நம்பியவரடியைப் பற்றிடுவோம் நல்லுறவு அடையச் செய்வார்
துன்னாலை கோயில் கொண்ட பிள்ளையார்
வெலிக்கம் தோட்டத்திலுறை பிள்ளையார்
வெகுளாத மனம் தந்து வாழவைப்பார்
நம்பியவரடியைப் பற்றிடுவோம் நெஞ்சமதில் அமைதியையே நிலைக்கச் செய்வார்
துன்னாலை கோயில் கொண்ட பிள்ளையார்
குவலயத்தைக் காத்தருளும் பிள்ளையார்
குற்றங்கள் தடுத் தெம்மை வாழவைப்பார்
நம்பியவரடியைப் பற்றிடுவோம் நித்தம் நலன்களையே பெருகச் செய்வார்
துன்னாலை கோயில் கொண்ட பிள்ளையார்
அருளளிக்க தயங்காத பிள்ளையார்
அன்பு மனம் தந்தெம்மை வாழவைப்பார்
நம்பியவரடியைப் பற்றிடுவோம் நிலையான மகிழ்வினையே அடையச் செய்வார்
துன்னாலை கோயில் கொண்ட பிள்ளையார்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
