ஐரோப்பா, நெதர்லாந்து நாடு டென் ஹெல்டர்- அருள்மிகு ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் திருக்கோயில்
எழில் சூழ்ந்த வள நாட்டில் இருந்தருளும் பெருமானே
ஏற்றமிகு நல்வாழ்வை எமக் கென்றும் அருளிடைய்யா
உன்னருளால் உலகமெல்லாம் உய்ய வேண்டும் பெருமானே
ஏற்ற அருள் தந்திடைய்யா நெதர்லாந்தில் கோயில் கொண்ட வரதராஜ விநாயகப் பெருமானே
வளம் கொழிக்கும் உலகினையே ஆட்சிசெய்யும் பெருமானே
வற்றாத கருணையினை எமக்கென்றும் அருளிடைய்யா
உன்கருணை உலகமெங்கும் நிறைய வேண்டும் பெருமானே
ஏற்ற அருள் தந்திடைய்யா நெதர்லாந்தில் கோயில் கொண்ட வரதராஜ விநாயகப் பெருமானே
ஆறுதலைத் தந்துலகை ஆட்கொள்ளும் பெருமானே
அச்சமில்லா உலகினையே எமக்கென்றும் அருளிடைய்யா
நோய் நொடிகள் இல்லாத உலகினையே எமக்கருள வேண்டும் பெருமானே
ஏற்ற அருள் தந்திடைய்யா நெதர்லாந்தில் கோயில் கொண்ட வரதராஜ விநாயகப் பெருமானே
ஆதரித்து அருளளிக்கும் ஐயனே பெருமானே
ஆற்றல் மிகு நல்லருளை எமக்கென்றும் அருளிடைய்யா
ஒன்றுபட்ட உலகினையே எமக்கருள வேண்டும் பெருமானே
ஏற்ற அருள் தந்திடைய்யா நெதர்லாந்தில் கோயில் கொண்ட வரதராஜ விநாயகப் பெருமானே
ஆற்றல் மிகு உலகினையே ஆக்கிவிடும் பெருமானே
அல்லலில்லா உலகினையே எமக்கென்றும் அருளிடைய்யா
அவதியில்லா வாழ்வதனை எமக்கருள வேண்டும் பெருமானே
ஏற்ற அருள் தந்திடைய்யா நெதர்லாந்தில் கோயில் கொண்ட வரதராஜ விநாயகப் பெருமானே
ஐரோப்பா கண்டத்தில் அரசாளும் பெருமானே
அனைத்துயிரும் நன்மைபெற எமக்கென்றும் அருளிடைய்யா
அன்பு நிறை வாழ்வினையே எமக்கருள வேண்டும் பெருமானே
ஏற்ற அருள் தந்திடைய்யா நெதர்லாந்தில் கோயில் கொண்ட வரதராஜ விநாயகப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.