வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாய், அருள்மிகு சீரணி நாகபூசணி அம்பாள் திருக்கோயில்
அருள் பொழிந்து அரவணைத்து ஆட்சி செய்யும் தாயே
அனுதினமும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும்
அச்சமில்லா நல்வாழ்வை என்றும் தந்தருள்வாய்
சண்டிலிப்பாய் இருந்தருளும் நாகபூசணி அம்மா சரணம்
கருணையுடன் தரணியையே காத்தருளும் தாயே
காவல் செய்து அருகிருந்து எமைக் காக்க வேண்டும்
கொடிய பகை அண்டாமல் என்றும் அரணிருப்பாய்
சண்டிலிப்பாய் இருந்தருளும் நாகபூசணி அம்மா சரணம்
வட இலங்கை குடியமர்ந்து வளமளிக்கும் எம் தாயே
வற்றாத நலன்களுடன் வாழவைக்க வேண்டும்
வீண்பயங்கள் நெருங்காத வாழ்வினையே தந்தருள்வாய்
சண்டிலிப்பாய் இருந்தருளும் நாகபூசணி அம்மா சரணம்
வாழ் நாளில் உடனிருந்து வழிகாட்டும் தாயே
வாழ்க்கையினைப் பெருமையுடன் வாழவைக்க வேண்டும்
வெற்றி முகம் காட்டும் வாழ்வினையே தந்தருள்வாய்
சண்டிலிப்பாய் இருந்தருளும் நாகபூசணி அம்மா சரணம்
சீரணி நாகபூசணி அம்பாள் என்ற பெயர் கொண்ட தாயே
சிந்தனை தெளிவுடனே வாழவைக்க வேண்டும்
சுதந்திரமாய் வாழும் வாழ்வினையே தந்தருள்வாய்
சண்டிலிப்பாய் இருந்தருளும் நாகபூசணி அம்மா சரணம்
சந்ததிகள் நலம் பெறவே ஆசி தரும் தாயே
சத்தியம் தவறாது வாழ வைக்க வேண்டும்
நித்தம் நிம்மதியாய் வாழும் வழி தந்தருள்வாய்
சண்டிலிப்பாய் இருந்தருளும் நாகபூசணி அம்மா சரணம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலை வர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.