வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம் – முந்தல் பிரதேசம் காரத்தன் வில்லு அருள்மிகு மகமாரி அம்மன் திருக்கோயில்
காரத்தன் வில்லு கோயில் கொண்ட தாயே மகமாரி
கரவில்லா மனம் தந்து காத்தருள வேண்டும்
கரவு கொண்டோர் உறவுகளைத் தடுத்திடவும் வேண்டும்
காரத்தன் வில்லு வீற்றிருக்கும் மகமாரி தாயே துணையிருப்பாய்
வளவாழ்வு தந்தெம்மை மகிழ்விக்கும் தாயே மகமாரி
வற்றாத கருணையினைத் தந்தெம்மை காத்தருள வேண்டும்
வளமான எதிர்காலம் தந்திடவும் வேண்டும்
காரத்தன் வில்லு வீற்றிருக்கும் மகமாரி தாயே துணையிருப்பாய்
மேற்கிலங்கை கோயில் கொண்டு காட்சி தரும் தாயே மகமாரி
மேதினியில் உயர்ந்த நிலை தந்தெம்மை காத்தருள வேண்டும்
மோதவரும் பகை, கொடுமை தடுத்திடவும் வேண்டும்
காரத்தன் வில்லு வீற்றிருக்கும் மகமாரி தாயே துணையிருப்பாய்
புத்தளம் மாநிலத்தில் குடியமர்ந்த தாயே மகமாரி
புவியினிலே பெருமை தந்தெம்மை காத்தருள வேண்டும்
பூதலத்தில் நிம்மதியே நிறைந்துவிட அருள் வேண்டும்
காரத்தன் வில்லு வீற்றிருக்கும் மகமாரி தாயே துணையிருப்பாய்
வெற்றிகள் தந்தெமக்கு நிம்மதியை அருளுகின்ற தாயே மகமாரி
வேதனை அண்டா வாழ்வ்தந்து காத்தருள வேண்டும்
மூண்டுவரும் தீமைகளை அடியோடு அகற்ற வேண்டும்
காரத்தன் வில்லு வீற்றிருக்கும் மகமாரி தாயே துணையிருப்பாய்
தளராத மனம் தந்து தாங்கி நிற்கும் தாயே மகமாரி
தளர்வில்லா வாழ்வு தந்து காத்தருள வேண்டும்
திறமைமிகு எதிர்காலம் எமை நாடி வரவேண்டும்
காரத்தன் வில்லு வீற்றிருக்கும் மகமாரி தாயே துணையிருப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவ ர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.