வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாண நகரம் அருள்மிகு பெருமாள் திருக்கோயில்
யாழ்ப்பாண நகரினிலே கோயில் கொண்ட பெருமாளே
பாழ்படா நிலை தந்து வாழ வைக்க எழுந்தருள்வாய்
வீழ்ச்சி இன்றி தலைநிமிர்ந்து வாழும்வழி தந்திடுவாய்
யாழ்ப்பாண நகர் அமர்ந்த பெருமாளே நீயே துணை
ஆழ்கடல் சூழ் இலங்கையிலே வந்தமர்ந்த பெருமாளே
எழுச்சிமிகு பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய்
வீழ்ச்சியின்றி மீட்சிபெற வழியமைத்துத் தந்திடுவாய்
யாழ்ப்பாண நகர் அமர்ந்த பெருமாளே நீயே துணை
காக்கும் பெருமை கொண்ட பாராளும் பெருமாளே
காலமெல்லாம் வாழ்வினிலே ஒளியேற்ற எழுந்தருள்வாய்
முயற்சியுடன் முன்னேறி வாழும் வழி தந்திடுவாய்
யாழ்ப்பாண நகர் அமர்ந்த பெருமாளே நீயே துணை
பாம்பணையில் பள்ளி கொள்ளும் கருணைமிகு பெருமாளே
பாதகங்கள் அண்டாநிலை தந்து வளமளிக்க எழுந்தருள்வாய் புத்துணர்வு தந்தெமக்கு வாழவழி தந்திடுவாய்
யாழ்ப்பாண நகர் அமர்ந்த பெருமாளே நீயே துணை
பொல்லாதார் தரும் துன்பம் துடைத்தெறியும் பெருமாளே
பொங்கிவரும் நல்வாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய்
புகழ்குன்றா பெருவாழ்வை வாழும் வழி தந்திடுவாய்
யாழ்ப்பாண நகர் அமர்ந்த பெருமாளே நீயே துணை
கேட்டவரம் தந்தெமக்குத் துணையிருக்கும் பெருமாளே
குற்றமில்லா பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய்
கூடிவரும் நன்மைகளை பெற்று வாழும் நிலை தந்திடுவாய்
யாழ்ப்பாண நகர் அமர்ந்த பெருமாளே நீயே துணை.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.