ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம், கதிர்காமம், செல்லக் கதிர்காமம் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
வேண்டும் வரம் தந்தெமக்கு ஆறுதல் தரும் பிள்ளையாரே
வேதனைகள் துடைத்தெறிந்து வெற்றிகளை அருளிடுவாய்
தூயமனம் கொண்டுன்னைத் தொழுது நிற்கும் எங்களுக்கு
துணையாக இருந்திடுவாய் செல்லக் கதிர்காமம் உறை தூயவனே பிள்ளையாரே
மாணிக்ககங்கை மத்தியிலே கோயில் கொண்ட பிள்ளையாரே
மனதினிலே நல்லமைதி தந்து நற்பேறு அருளிடுவாய்
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
துணையாக இருந்திடுவாய் செல்லக் கதிர்காமம் உறை தூயவனே பிள்ளையாரே
உலகாளும் அன்னை உமை தாலாட்டும் பிள்ளையாரே
உண்மை யெங்கும் நிலைத்திடவே உரிய வழி அருளிடுவாய்
தினமும் உன்னடியைத் தேடிவரும் எங்களுக்கு
துணையாக இருந்திடுவாய் செல்லக் கதிர்காமம் உறை தூயவனே பிள்ளையாரே
சலசலக்கும் கங்கை அம்மன் வாழ்த்திவரும் பிள்ளையாரே
சத்தியம் என்றும் உறுதிபட உரியவழி அருளிடுவாய்
சித்தமெல்லாம் உன்நாமம் நிறைந்திருக்கும் எங்களுக்கு
துணையாக இருந்திடுவாய் செல்லக் கதிர்காமம் உறை தூயவனே பிள்ளையாரே
ஏற்றமிகு நல்வாழ்வு நாமடைய உரியவழி அருளிடுவாய்
ஏக்கத்துடன் உன்னடியை நாடிவரும் எங்களுக்கு
துணையாக இருந்திடுவாய் செல்லக் கதிர்காமம் உறை தூயவனே பிள்ளையாரே
அறிவு தந்து ஆற்றல் தந்து எழுச்சி தரும் பிள்ளையாரே
அமைதி நிறை வாழ்வினையே அடையவழி காட்டிடுவாய்
ஆறுதலாய் உன்னடியில் நிம்மதியாய் வாழ எங்களுக்கு
துணையாக இருந்திடுவாய் செல்லக் கதிர்காமம் உறை தூயவனே பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.