வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு அருள்மிகு அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயில்
யாழ் அரசர் ஆட்சியிலே சீர் பெற்ற பிள்ளையாரே
வாழ்க்கையில் நீயென்றும் எமக்கருள வந்தருள்வாய்
பாழ்படா நிலை தந்து வாழ வைக்க வேண்டுமைய்யா
நாயன்மார்கட்டு கோயில் கொண்ட அரசகேசரிப் பிள்ளையாரே
அச்சம் தரும் நிகழ்வுகளைத் தடுத்துவிடும் பிள்ளையாரே
ஆதரவு தந்தென்றும் எமக்கருள வந்தருள்வாய்
அச்சம் தவிர்த்து நாம் வாழ வழி வேண்டுமைய்யா
நாயன்மார்கட்டு கோயில் கொண்ட அரசகேசரிப் பிள்ளையாரே
அரசமரம் அருகு கொண்டு அமர்ந்திருக்கும் பிள்ளையாரே
ஆறுதலைத் தந்தென்றும் எமக்கருள வந்தருள்வாய்
மகிழ்வுடனே எமையென்றும் வாழ வைக்க வேண்டுமைய்யா
நாயன்மார்கட்டு கோயில் கொண்ட அரசகேசரிப் பிள்ளையாரே
அமர்ந்த இடமிருந்து அருள் பொழியும் பிள்ளையாரே
ஆறாத கவலை பிணி அகற்றிடவே வந்தருள்வாய்
கௌரவமாய் எமையென்றும் வாழ வைக்க வேண்டுமைய்யா
நாயன்மார்கட்டு கோயில் கொண்ட அரசகேசரிப் பிள்ளையாரே
தேடுமிடமெல்லாம் துணையிருக்கும் பிள்ளையாரே
துவளாத மனநிலையை எமக்கருள வந்தருள்வாய்
நிம்மதியாய் எமையென்றும் வாழ வைக்க வேண்டுமைய்யா
நாயன்மார்கட்டு கோயில் கொண்ட அரசகேசரிப் பிள்ளையாரே
தொல்லை தடுத்தெமக்கு நலமளிக்கும் பிள்ளையாரே
தோல்வியில்லா நன்நிலையை எமக்கருள வந்தருள்வாய்
தெளிந்த மனதுடனே வாழும் வழி வேண்டுமைய்யா
நாயன்மார்கட்டு கோயில் கொண்ட அரசகேசரிப் பிள்ளையாரே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.