வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் இணுவில் அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில்
கவலைகளைப் போக்கியெம்மை வாழவைக்கும் தாயே
காலமெல்லாம் எமையணைத்து காத்தருள வேண்டும்
குறையில்லா நிறைவாழ்வைத் தந்தருள வருவாய்
இணுவில் திருப்பதியில் உறைந்தருளும் சிவகாமி அம்மா
செந்தமிழ் ஒலிக்கின்ற நற்பதியில் உறைகின்ற தாயே
செம்மைவழி காட்டியெம்மைக் காத்தருள வேண்டும்
நிறைவான நல்லருளைத் தந்தருள வருவாய்
இணுவில் திருப்பதியில் உறைந்தருளும் சிவகாமி அம்மா
வளம் நிறைந்த நன்னிலத்தில் கோயில் கொண்ட தாயே வற்றாத கருணை தந்து காத்தருள வேண்டும்
நிலையான பெருவளத்தை தந்தருள வருவாய்
இணுவில் திருப்பதியில் உறைந்தருளும் சிவகாமி அம்மா
பொற்பாதம் உடையவளே சிவகாமி அம்மா
போற்றி நிற்கும் எங்களை நீ காத்தருள வேண்டும்
நிலைத்த நல்ல வாழ்வினையே தந்தருள வருவாய்
இணுவில் திருப்பதியில் உறைந்தருளும் சிவகாமி அம்மா
கேட்கும் வரம் தந்தெம்மை ஆட்கொள்ளும் தாயே
கொடுமைகளைத் தடுத்தெம்மைக் காத்தருள வேண்டும்
காலத்தால் நிலைத்து நிற்கும் நலன்களைத் தந்தருள வருவாய்
இணுவில் திருப்பதியில் உறைந்தருளும் சிவகாமி அம்மா
அன்புடனே அரவணைக்கும் கருணை மிகு தாயே
அச்சமில்லா வாழ்வு தந்து காத்தருள வேண்டும்
ஆற்றல் கொண்டு வாழும் நிலை தந்தருள வருவாய்
இணுவில் திருப்பதியில் உறைந்தருளும் சிவகாமி அம்மா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.