வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் – சிலாபம் முன்னேஸ்வரம் அருள்மிகு வடிவாம்பிகை அம்பாள் சமேத முன்னேஸ்வரப் பெருமான் திருக்கோயில்
முன்னேஸ்வரப் பதியில் கோயில் கொண்ட சிவனே
முத்தமிழை எமக்களித்த பேரருளே ஐயா
அன்னை வடிவாம்பிகையுடன் அருளுகின்ற சிவனே
அச்சமில்லா நிம்மதியைத் தந்திடுவாய் ஐயா
தில்லையிலே ஆடுகின்ற பேரருளே சிவனே
திருவருளை நாடுகின்றோம் அருள் தருவாய் ஐயா
வல்வினைகள் போக்கியெம்மைக் காத்தருளும் சிவனே
வரம் தந்து எங்களுக்கு வாழ்வளிப்பாய் ஐயா
இராமபிரான் பூசையினால் பெருமை கொண்ட சிவனே
இரவு பகல் துணையிருந்து காத்தருள்வாய் ஐயா
அறம் காத்து மறம் அழித்து அருளுகின்ற சிவனே
அச்சமில்லா நிம்மதியைத் தந்திடுவாய் ஐயா
நாடி வந்து உன்பாதம் சரணடைந்தோம் சிவனே
நல்லருளை வழங்கியெம்மை அரவணைப்பாய் ஐயா
பாடித்துதித் துன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே
பார்த்து அருள் வழங்கி எம்மை ஆதரிப்பாய் ஐயா
வேதங்கள் போற்றுகின்ற மெய்ப் பொருளே சிவனே
வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய் ஐயா
பேதலித்து நிற்பவர்க்கு வழிகாட்டும் சிவனே
பேதமைகள் போக்கியெம்மைக் காத்தருள்வாய் ஐயா
சிலாப நகர் இருந்தருளும் திருவருளே சிவனே
சிந்தனையில் தெளிவினையே தந்திடுவாய் ஐயா
அண்டமெல்லாம் ஆளுகின்ற அற்புதனே சிவனே
அனுதினமும் உனது நல் ஆசியை அருளிடுவாய் ஐயா
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
