கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், மயிலம்பாவெளி, அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்
கருணைமிகு பேரருளே காமாட்சி அம்மா
கருதிதினிலே நீயிருந்து வழிகாட்ட வேண்டும்
அருகினிலே நீயிருந்தால் ஆட்சிபலம் கிட்டிவிடும்
மயிலம்பாவெளி இருந்தருளும் காமாட்சி அம்மா சரணம்
துவண்டிருப்போர் துன்பங்களைத் துரத்திவிடும் காமாட்சி அம்மா
துணையிருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்
தூயவளே அருகிருந்து அருளளித்து விட்டால் நன்மைகள் எமக்கென்றும் கிட்டிவிடும்
மயிலம்பாவெளி இருந்தருளும் காமாட்சி அம்மா சரணம்
தோல்விகளைத் துடைத் தெறிந்து தெளிவு தரும் காமாட்சி அம்மா
தொய்வு நிலை போக்கியெமக்கு வழிகாட்ட வேண்டும்
துணிவினையே நீதந்தால் தோல்வி பயம் அகன்றுவிடும்
மயிலம்பாவெளி இருந்தருளும் காமாட்சி அம்மா சரணம்
கேடுகளைக் களைந்தெறிந்து மனவுறுதி தரும் காமாட்சி அம்மா
துயர் களைந்து எமக்கென்றும் வழிகாட்ட வேண்டும்
தொல்லைகளை நீ தடுத்தால் நிம்மதியே கிட்டிவிடும்
மயிலம்பாவெளி இருந்தருளும் காமாட்சி அம்மா சரணம்
அழகு மிகு திருக்கோயில் உடையவளே காமாட்சி அம்மா
அச்சமுறும் நிலை போக்கி வழி காட்ட வேண்டும்
அகமகிழ்வு நீ தந்தால் அச்சமெல்லாம் அகன்றுவிடும்
மயிலம்பாவெளி இருந்தருளும் காமாட்சி அம்மா சரணம்
கிழக்கிலங்கை கோயில் கொண்டு துணிவு தரும் காமாட்சி அம்மா
கிட்ட வரும் பகை கொடுமை அகற்றி வழிகாட்ட வேண்டும்
காலமெல்லாம் உடனிருந்தால் கவலைகள் அகன்று விடும்
மயிலம்பாவெளி இருந்தருளும் காமாட்சி அம்மா சரணம்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.