மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம்- மஸ்கெலியா மொக்கா தோட்டம் – அருள்மிகு அம்மன் திருக்கோயில்
வளம் நிறைந்த மலையகத்தின் மத்தியிலே கோயில் கொண்ட எங்கள் அம்மா
வளம் கொண்ட நல்வாழ்வை தந்தருள கருணை செய்வாய்
வாட்டமில்லா வாழ்வுதர விரைந்திடுவாய்
மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா
மொக்கா பெருந்தோட்டம் மத்தியிலே கோயில் கொண்ட எங்கள் அம்மா
பெருமைமிகு பெருவாழ்வை தந்தருள கருணை செய்வாய்
துன்பமில்லா வாழ்வு தர விரைந்திடுவாய்
மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா
மலைசூழ்ந்த பெருந்தோட்டம் வந்துறையும் எங்கள் அம்மா
மதிதவறா நெறி நின்று வாழ்வதற்குக் கருணை செய்வாய்
வெற்றி கொண்ட வாழ்வுக்கு வழி திறக்க விரைந்திடுவாய்
மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா
வாழ்விற்கு ஒளியேற்றி வழி காட்டும் எங்கள் அம்மா
வழிதவறா நெறிநின்று வாழவைக்கக் கருணை செய்வாய்
தோல்விகளைத் தடுத்து நல்வாழ்வுக்கு உதவிடவே விரைந்திடுவாய்
மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா
என்றும் உடனிருந்து எமையாளும் தாயே அம்மா
ஏமாற்றமில்லாத வாழ்வுக்கு கருணை செய்திடுவாய்
நம்பிக்கை கொண்ட வாழ்வை உறுதி செய்ய விரைந்திடுவாய்
மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா
தாயாகவிருந்துலகைக் காக்கின்ற தாயே அம்மா
தப்பில்லா வாழ்வுக்கு கருணை செய்வாய்
நேர்மைமிகு நல்வாழ்வைத் தந்தருள விரைந்திடுவாய்
மஸ்கேலியா இருந்தருளும் கருணை மிகு தாயே அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.