வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், முந்தல் கீரியன்கள்ளி, ஐந்துபங்குத் தோட்டம், அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணியர் திருக்கோயில்
ஆறாத துயர்களையும் ஆற்றுவிக்கும் வேலவனே
ஆறுதலைத் தந்தெம்மை வாழவைக்க கருணை செய்வாய்
வள்ளி தேவசேனாவுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியா
வாழ நல்ல வழியமைத்து ஆறுதலைத் தாருமைய்யா
சிவனாரின் இளமகனாய் வந்துதித்த வேலவனே
வேதனைகள் அண்டாநிலை தந்தெம்மை காத்தருளச் செய்வாய்
வெற்றிகளைத் தந்தெம்மை வாழச் செய்யும் சுப்பிரமணியா
வாழ நல்ல வழியமைத்து ஆறுதலைத் தாருமைய்யா
சேவற் கொடி தாங்கி வீற்றிருக்கும் வேலவனே
சேவை மனம் கொண்டவராய் வாழநீ வழி தருவாய்
தளராத மனவுறுதி தந்தெம்மை வாழச் செய்யும் சுப்பிரமணியா
வாழ நல்ல வழியமைத்து ஆறுதலைத் தாருமைய்யா
மயிலேறி உலகளந்த மாதவனே வேலவனே
மாசில்லா வாழ்வுதந்து வாழ நீ கருணை செய்வாய்
தடையற்ற முன்னேற்றம் தந்தெம்மை வாழச் செய்யும் சுப்பிரமணியா
வாழ நல்ல வழியமைத்து ஆறுதலைத் தாருமைய்யா
ஆறுபடை வீடு கொண்ட முத்தமிழே வேலவனே
அச்சமில்லா வாழ்வு தந்து வாழநீ அருளிடுவாய்
நிம்மதியைத் தந்தெம்மை வாழச் செய்யும் சுப்பிரமணியா
வாழ நல்ல வழியமைத்து ஆறுதலைத் தாருமைய்யா
சூரனை அடக்கியருள் தந்த வேலவனே
சுற்றம் சூழ நல்வாழ்வு வாழ நீ கருணை செய்வாய்
உளவமைதி தந்தெம்மை வாழச் செய்யும் சுப்பிரமணியா
வாழ நல்ல வழியமைத்து ஆறுதலைத் தாருமைய்யா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.