கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை, சிவயோகபுரம் – அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத நடேசர் திருக்கோயில்
அழகுமிகு திருமலையில் உறைந்தருளும் பெருமான்
அஞ்சாத நிலைதந்து வாழவழி தருவார்
சிந்தையிலே இருத்தியவர் பாதம் தொழுவோம்
சீரான வாழ்வு தந்து அரவணைப்பார் சிவகாம சுந்தரியோடமர்ந்த நடேசப் பெருமான்
குளக்கோட்டன் ஆட்சிசெய்த தமிழ் மண்ணிலுறை பெருமான்
குற்றங்களைக் களைந்து எமக்கு வாழவழி தருவார்
பக்தி நிறை மனத்தினராய் அவர் பாதம் தொழுவோம்
சீரான வாழ்வு தந்து அரவணைப்பார் சிவகாம சுந்தரியோடமர்ந்த நடேசப் பெருமான்
தில்லையிலே நின்றாடும் தீரன் எங்கள் பெருமான்
திருமலையில் கோயில் கொண்டு எமக்கருளைத் தருவார்
தொல்லையில்லா வாழ்வு பெற அவர் அடியைப் பணிவோம்
சீரான வாழ்வு தந்து அரவணைப்பார் சிவகாம சுந்தரியோடமர்ந்த நடேசப் பெருமான்
கங்கையம்மை முடிகொண்டு கருணை செய்யும் பெருமான்
காவல் நிறை நல்வாழ்வை எமக்கென்றும் தருவார்
தீமைகள் நெருங்காத நன்மைபெற அவர் பாதம் பணிவோம்
சீரான வாழ்வு தந்து அரவணைப்பார் சிவகாம சுந்தரியோடமர்ந்த நடேசப் பெருமான்
குவலயத்தை ஆட்டுவிக்கும் தலைவன் எங்கள் பெருமான்
குணம் நலமாக என்றும் இருக்க எமக்கருளைத் தருவார்
குற்றம் குறை இல்லா வாழ்வுபெற அவர் பாதம் தொழுவோம்
சீரான வாழ்வு தந்து அரவணைப்பார் சிவகாம சுந்தரியோடமர்ந்த நடேசப் பெருமான்
கிழக்கிலங்கை கோயில் கொண்டு அருளுகின்ற பெருமான்
கிலேசமின்றி நாம் வாழ என்றும் எமக்கருளைத் தருவார்
நிம்மதி நிறை வாழ்வு பெற அவர் அடியைத் தொழுவோம்
சீரான வாழ்வு தந்து அரவணைப்பார் சிவகாம சுந்தரியோடமர்ந்த நடேசப் பெருமான்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.