வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலை அருள்மிகு நகுலேசுவரப் பெருமான் திருக்கோயில்
உலகினையே ஆட்டுவித்து அழகு பார்க்கும் சிவனார்
அச்சமில்லா நிம்மதியைத் தந்தருள்வார் எமக்கு
நம்பியவர் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
நலன்கள் தந்து உடனிருந்து காத்தருள்வார் நகுலேசுவரப் பெருமான்
பழமை மிகு திருவிடத்தில் உறைந்தருளும் சிவனார்
கலக்கமில்லா மனத்தினையே தந்தருள்வார் எமக்கு
நலன் நாடி அவர் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
நலன்கள் தந்து உடனிருந்து காத்தருள்வார் நகுலேசுவரப் பெருமான்
வடஇலங்கை கரையினிலே கோயில் கொண்ட சிவனார்
வரும் துயர்கள் தடுத்தெம்மை அருள் தருவார் எமக்கு
உறுதி கொண்ட மனத்தினராய் அவரடியைப் பற்றிடுவோம் நாங்கள்
நலன்கள் தந்து உடனிருந்து காத்தருள்வார் நகுலேசுவரப் பெருமான்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து அருளுகின்ற சிவனார்
நிமிர்ந்த நல்ல வாழ்வைத் தந்தருள்வார் எமக்கு
நேர்மை நிறை மனத்தினராய் அவர் பாதம் பற்றிடுவோம் நாங்கள்
நலன்கள் தந்து உடனிருந்து காத்தருள்வார் நகுலேசுவரப் பெருமான்
உலகாளும் தாயவளை இடம் கொண்ட சிவனார்
உத்தமராய் வாழவழியமைத்துத் தருவார் எமக்கு
பக்குவமாய் நேர்வழியில் வாழ அவர் அடியைப் பற்றிடுவோம் நாங்கள்
நலன்கள் தந்து உடனிருந்து காத்தருள்வார் நகுலேசுவரப் பெருமான்
வந்த துன்பம் போக்கியெம்மை வழிநடத்தும் சிவனார்
வீரமிகு வாழ்வு தந்து வெற்றியையும் தருவார் எமக்கு
சுற்றி வரும் தீமைகளை இல்லாது அழித்துவிட சிவனார் அடி பற்றிடுவோம் நாங்கள்
நலன்கள் தந்து உடனிருந்து காத்தருள்வார் நகுலேசுவரப் பெருமான்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.