வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உப்புக்குளம் அருள்மிகு சந்திரசேகரப் பிள்ளையார் திருக்கோயில்
ஐந்து கரம் கொண்டு அருளுகின்ற கணபதியே
ஐயமற்ற மனதுடனே வாழ வழியமைத்திடைய்யா
அகிலமெங்கும் நிறைந்துறையும் ஐயனே கணபதியே
அறிவுதந்து ஆற்றல் தர விரைந்தருள வேண்டுமைய்யா
வடஇலங்கை கோயில் கொண்ட வள்ளலே கணபதியே
வரும் துன்பம் தடுத்திடவே வழியை நீ அமைத்திடைய்யா
வளம் கொண்டோர் மனங்களிலே நிறைந்துறையும் கணபதியே
உறுதி தந்து உடனுறைய விரைந்தருள வேண்டுமைய்யா
உப்புக்குளம் அருகினிலே உவந்துறையும் கணபதியே
உண்மை யென்றும் நிலைத்திடவே வழியை நீ அமைத்திடைய்யா
யாழ்ப்பாணத் திரு நிலத்தில் காட்சிதரும் கணபதியே
வளம் கொண்ட வாழ்வுதர விரைந்தருள வேண்டுமைய்யா
நம்பித் தொழும் அடியார்களின் நலன் காக்கும் கணபதியே
நெஞ்சமதில் உறுதி நிலைத்திடவே வழியை நீ அமைத்திடைய்யா
சங்கிலியன் ஆண்ட மண்ணில் இருந்தருளும் கணபதியே
சங்கடங்கள் அண்டா நல் வாழ்வு தர விரைந்தருள வேண்டுமைய்யா
பத்து நாள் திருவிழா காணும் பெருமானே கணபதியே
பரிதவிக்கும் நிலையில்லா வழியை நீ அமைத்திடைய்யா
அமைதி கொண்ட திருவுருவில் அமர்ந்தருளும் கணபதியே
அச்சமில்லா வாழ்வுதர விரைந்தருள வேண்டுமைய்யா
தொல்லைகள் போக்கிவிடும் தொந்திக் கணபதியே
தோல்வியின்றி வாழும் வழி எமக்கு நீ அமைத்திடைய்யா
அஞ்சாமை தந்தெம்மை ஆளுகின்ற கணபதியே
அனுதினமும் நல்வாழ்வு தந்து விரைந்தருள வேண்டுமைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.