வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் சங்குவேலி – அருள்மிகு சிவஞானப் பிள்ளையார் திருக்கோயில்
வட இலங்கை கோயில் கொண்ட மாமணியே
வளமான எதிர்காலம் தந்திடைய்யா எங்களுக்கு
வளம் கொண்ட வாழ்வினையே நாமடைய வேண்டுகிறோம்
சங்குவேலி கோயில் கொண்ட சிவஞானப் பிள்ளையாரே அருளளிப்பாய்
எங்கும் இன்பம் பொங்கிவிட அருளுகின்ற மாமணியே
தளராத வாழ்வு தனைத் தந்திடைய்யா எங்களுக்கு
மகிழ்ச்சி நிறை வாழ்வினையே நாமடைய வேண்டுகிறோம்
சங்குவேலி கோயில் கொண்ட சிவஞானப் பிள்ளையாரே அருளளிப்பாய்
ஆற்றல் தந்து அரவணைத்து அருளளிக்கும் மாமணியே
ஆறுதலுடன் வாழும் வரம் தந்திடைய்யா எங்களுக்கு
அன்பு நிறை வாழ்வினையே நாமடைய வேண்டுகிறோம்
சங்குவேலி கோயில் கொண்ட சிவஞானப் பிள்ளையாரே அருளளிப்பாய்
ஞானஒளி தந்து வழிநடத்தும் மாமணியே
நல்வாழ்வு வாழும் வழி காட்டிடைய்யா எங்களுக்கு
துன்பமில்லா நிறை வாழ்வை நாமடைய வேண்டுகிறோம்
சங்குவேலி கோயில் கொண்ட சிவஞானப் பிள்ளையாரே அருளளிப்பாய்
நிலைத்த நிம்மதியைத் தந்தருளும் மாமணியே
நித்தமும் உடனிருந்து அருள் தந்திடைய்யா எங்களுக்கு
உடல் நலமும், உளநலமும் நாமடைய வேண்டுகிறோம்
சங்குவேலி கோயில் கொண்ட சிவஞானப் பிள்ளையாரே அருளளிப்பாய்
பத்து நாட்கள் திருவிழா
காணுகின்ற மாமணியே
பாசமுடன் வாழும் வழி தந்திடைய்யா எங்களுக்கு
நோய் நொடிகள் நெருங்கா நிலை நாமடைய வேண்டுகிறோம்
சங்குவேலி கோயில் கொண்ட சிவஞானப் பிள்ளையாரே அருளளிப்பாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.