வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் மாவிட்டபுரம் – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
வளம் கொண்ட தமிழ் மண்ணில் கோயில் கொண்ட வேலவனே
வற்றாத நற்கருணை எமக்களிக்க வேண்டுமைய்யா
வெற்றிமேல் வெற்றி தந்து எமை ஆளவாருமைய்யா
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமி தாள் சரணம்
மயிலேறி உலகளந்த மாமணியே வேலவனே
மாசற்ற நல்வாழ்வை எமக்களிக்க வேண்டுமைய்யா
தோல்வி நிலை அண்டாது எமை ஆளவாருமைய்யா
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமி தாள் சரணம்
வேல்தாங்கி நின்றிருந்து வினை தீர்க்கும் வேலவனே
வெறுப்பில்லா மனநிலையை எமக்களிக்க வேண்டுமைய்யா
முன்னேறும் வழி காட்டி எமை ஆளவாருமைய்யா
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமி தாள் சரணம்
யாழரசர் ஆட்சியிலே பெருமை பெற்ற வேலவனே
பாழ்படா மனத்தினையே
எமக்களிக்க வேண்டுமைய்யா
மகிழ்ச்சி நிறை வாழ்வுக்கு வழிகாட்டி எமை ஆளவாருமைய்யா
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமி தாள் சரணம்
தெய்வானை திருமகளை அருகு கொண்டு அருளும் வேலவனே
தெளிவான நல்லறிவை எமக்களிக்க வேண்டுமைய்யா
துவளாத மனம் தந்து எமை ஆளவாருமைய்யா
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமி தாள் சரணம்
சிவனாரின் இளமகனாய் வந்துதித்த வேலவனே
சீரான மன நிலையை எமக்களிக்க வேண்டுமைய்யா
சிதையாத மனம் தந்து எமை ஆளவாருமைய்யா
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமி தாள் சரணம்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.