வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – இணுவில் அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில்
சீர்மை மிகு வாழ்வு தரும் தாயே சிவகாமி
சித்தமெல்லாம் நிறைந்துறைந்து வழிகாட்டிடம்மா
தூய நல்வாழ்வழிக்க மனம் கொள்வாய்
இணுவில் கோயில் கொண்ட தாயே சிவகாமி
அனைத்துயிர்க்கும் தாயாக இருப்பவளே சிவகாமி
அச்சமின்றி நாம் வாழ உரியவழி காட்டிடம்மா
வாழ நல்ல வழிகாட்டிடவே மனம் கொள்வாய்
இணுவில் கோயில் கொண்ட தாயே சிவகாமி
அமைதி நிறை மனம் கொண்டு அரவணைக்கும் தாயே சிவகாமி
அனுதினமும் உடனிருந்து வாழ வழிகாட்டிடம்மா
அரவணைத்து அருளளிக்க மனம் கொள்வாய்
இணுவில் கோயில் கொண்ட தாயே சிவகாமி
வட இலங்கை எழுந்தருளி வழிகாட்டி நிற்பவளே சிவகாமி
வழித்துணையாயிருந் தெமக்கு என்றும் வழி காட்டிடம்மா
வருந் துன்பம் தடுத்திடவே மனம் கொள்வாய்
இணுவில் கோயில் கொண்ட தாயே சிவகாமி
துயர் போக்கி அருளுகின்ற தாயே சிவகாமி
துணையாக இருந்தென்றும் வழி காட்டிடம்மா
துயர் அண்டா நிலை தரவே மனம் கொள்வாய்
இணுவில் கோயில் கொண்ட தாயே சிவகாமி
ஆதரவு தந்தெம்மை அணைத்தருளும் தாயே சிவகாமி
அஞ்சாத மனம் தந்து வழிகாட்டிடம்மா
ஆறுதலைத் தந்திடவே என்றும் மனம் கொள்வாய்
இணுவில் கோயில் கொண்ட தாயே சிவகாமி.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.