வடமாகாணம் – முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை, குமாரபுரம் அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில்
வேலவனே உமையவளின் இளமகனே
வெற்றி தந்து எம்மை என்றும் வாழவைக்க வேண்டுமைய்யா
துன்பமில்லா நிலை என்றும் தொடரவே அருள்செய்வாய்
குமாரபுரம் கோயில் கொண்ட சித்திர வேலாயுதப் பெருமானே
வளம் கொண்ட தமிழ் மண்ணில் வந்துறையும் வேலவனே
வழுவில்லா வாழ்வு தந்து வாழவைக்க வேண்டுமைய்யா
சோர்வில்லா நிலை என்றும் தொடரவே அருள்செய்வாய்
குமாரபுரம் கோயில் கொண்ட சித்திர வேலாயுதப் பெருமானே
விநாயகருக்கு அடுத்தவராய் வந்துதித்த மயிலோனே
வளங் கொண்ட வாழ்வு தந்து வாழவைக்க வேண்டுமைய்யா
தோல்வியில்லா நிலை என்றும் தொடரவே அருள்செய்வாய்
குமாரபுரம் கோயில் கொண்ட சித்திர வேலாயுதப் பெருமானே
உடனிருந்து அருளளிக்கும் உத்தமனே குகனே
உணர்வு குன்றா நிலையில் எம்மை வாழவைக்க வேண்டுமைய்யா
பகையில்லா நிலையில் என்றும் நாம் வாழ தொடரவே அருளிடுவாய்
குமாரபுரம் கோயில் கொண்ட சித்திர வேலாயுதப் பெருமானே
அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் சிவன் மகனே
அருள் நிறைந்த வாழ்வு தந்து அரவணைக்க வேண்டுமைய்யா
அச்சமில்லா வாழ்வினையே நாம் வாழ அருள்செய்வாய்
குமாரபுரம் கோயில் கொண்ட சித்திர வேலாயுதப் பெருமானே
தமிழ் மொழிக்கு உயிரூட்டம் தந்தவனே முருகைய்யா
தளர்வில்லா நிலை தந்து ஆதரிக்க வேண்டுமைய்யா
தெளிவான வாழ்வினையே நாம் வாழ அருள்செய்வாய்
குமாரபுரம் கோயில் கொண்ட சித்திர வேலாயுதப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.