வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்ட உடுவில் அருள்மிகு ஞானவைரவர் திருக்கோயில்
காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமானே
காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்ய வாருமைய்யா
கவலைகள் அகன்றிடவும் நினைவுகள் உயிர்பெறவும்
அருளளிப்பாய் உடுவில் உறை ஞானவைரவப் பெருமானே
ஞானம் நிறை நல்லறிவை வழங்கு கின்ற பெருமானே
நீதிநெறி தவறாமல் காவல் செய்ய வேண்டுமைய்யா
நேர்மைவழி நின்று நல்ல நிலை பெறவும்
அருளளிப்பாய் உடுவில் உறை ஞானவைரவப் பெருமானே
ஆற்றல் தந்து காவல் செய்து அரவணைக்கும் பெருமானே
அஞ்சும் நிலை இல்லா நிலை தந்தருள வாருமைய்யா
ஏற்றமிகு வாழ்வு தந்து உயர்வு பெறச் செய்திடவும்
அருளளிப்பாய் உடுவில் உறை ஞானவைரவப் பெருமானே
வளம் தந்து வாழ்வளித்து வாழச்செய்யும் பெருமானே
வாழ்க்கை நிலை உயர்வடையும் வழியினையே தந்தருள வாருமைய்யா
மேன்மைமிகு வாழ்வு தந்து வளம் பெறவழி செய்திடவும்
அருளளிப்பாய் உடுவில் உறை ஞானவைரவப் பெருமானே
கேட்கும் அருள் தந்தென்றும் காத்தருளும் பெருமானே
கொடுமை நிலை இல்லாநிலை தந்தருள வாருமைய்யா
குறையில்லா நிறை வாழ்வு தந்து உயர்வு பெறச் செய்திடவும் அருளளிப்பாய் உடுவில் உறை ஞானவைரவப் பெருமானே
ஏற்றமிகு வாழ்வுதந்து உடனிருக்கும் பெருமானே
ஏமாற்றம் அடையா நிலை எமக்கருள வாருமைய்யா
ஒன்றுபட்டு உயர் வாழ்வு வாழ வழி பெற்றிடவும்
அருளளிப்பாய் உடுவில் உறை ஞானவைரவப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.