மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம் – பேராதனை அருள்மிகு குறிஞ்சிக்குமரன் திருக்கோயில்
மலையகத்தின் தலைநகரில் வந்துறையும் பெருமானே
மனவெழுச்சி பெற்றுவிட வழியமைத்து விட்டிடைய்யா
மானமுடன் நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பேராதனை கோயில் கொண்ட குறிஞ்சிக்குமரா நீ சரணம்
பழிபாவம் போக்கியெம்மை காத்தருளும் பெருமானே
பெருமை மிகு நல்வாழ்வைப் பெற்றுவிட வழியமைத்து விட்டிடைய்யா
மேன்மையுடன் நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பேராதனை கோயில் கொண்ட குறிஞ்சிக்குமரா நீ சரணம்
குன்றுதோறும் குடி கொண்டு அருள் சொரியும் பெருமானே
குறையில்லா நிறை வாழ்வைப் பெற்றுவிட வழியமைத்து விட்டிடைய்யா
குறையின்றி நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பேராதனை கோயில் கொண்ட குறிஞ்சிக்குமரா நீ சரணம்
மயில்மீது வீற்றிருந்து அருள் பொழியும் பெருமானே
மாசற்ற மனத்தினையே பெற்றுவிட வழியமைத்து விட்டிடைய்யா
முயற்சியுடன் நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பேராதனை கோயில் கொண்ட குறிஞ்சிக்குமரா நீ சரணம்
அழகு திருமுகங்கள் கொண்டு கருணை தரும் பெருமானே
ஆறுதலைப் பெற்று நாம் வாழ வழியமைத்து விட்டிடைய்யா
இன்னலின்றி நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா
பேராதனை கோயில் கொண்ட குறிஞ்சிக்குமரா நீ சரணம்
பல்கலைக் கூடமருகில் குடியிருக்கும் பெருமானே
பாவங்கள் இல்லா நல்வாழ்வைப் பெற்றுவாழ வழியமைத்து விட்டிடைய்யா
புண்ணியர்கள் புடை சூழ நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா
பேராதனை கோயில் கொண்ட குறிஞ்சிக்குமரா நீ சரணம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.