மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம், டிக்கோயா வனராஜா கீழ்ப்பிரிவு, அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில்
காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் திருமகனே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுமைய்யா
நம்பியுன்னை தொழுது நிற்கும் எங்களுக்கு
நற்காவல் இருந்திடைய்யா வனராஜா இருந்தருளும் மதுரை வீரத்திருமகனே
நற்காவல் தந்தென்றும் காவல் செய்யும் திருமகனே
நித்தமும் உடனிருந்து காத்தருள வேண்டுமைய்யா
தேடிவந்து தொழுது நிற்கும் எங்களுக்கு
நற்காவல் இருந்திடைய்யா வனராஜா இருந்தருளும் மதுரை வீரத்திருமகனே
மலை சூழ்ந்த திருவிடத்தில் இருந்தருளும் திருமகனே
மலைப்பில்லா நிலை தந்து காத்தருள வேண்டுமைய்யா
நாடிவந்து அடிபணியும் எங்களுக்கு
நற்காவல் இருந்திடைய்யா வனராஜா இருந்தருளும் மதுரை வீரத்திருமகனே
மத்திய மலை நாட்டில் வீற்றருளும் திருமகனே
மதிதவறா நெறிதந்து காத்தருள வேண்டுமைய்யா
அருள் நாடித் தொழும் எங்களுக்கு
நற்காவல் இருந்திடைய்யா வனராஜா இருந்தருளும் மதுரை வீரத்திருமகனே
அதர்மத்தை அழித்தொழிக்க அருளுகின்ற திருமகனே
அச்சமில்லா நிலை தந்து காத்தருள வேண்டுமைய்யா
நெஞ்சகத்தில் நிம்மதியை நாடிநிற்கும் எங்களுக்கு
நற்காவல் இருந்திடைய்யா வனராஜா இருந்தருளும் மதுரை வீரத்திருமகனே
நம்பித் தொழும் அடியவரின் நலன்காக்கும் திருமகனே
நிம்மதியே நிலைத்திருக்க காத்தருள வேண்டுமைய்யா
நேர்மைமிகு பெருவாழ்வை நாடி நிற்கும் எங்களுக்கு
நற்காவல் இருந்திடைய்யா வனராஜா இருந்தருளும் மதுரை வீரத்திருமகனே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.