வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – இணுவில், அருள்மிகு ஞானலிங்கேச்சுவரம் திருக்கோயில்
ஞான ஒளி காட்டியெம்மை வழிநடத்தும் பெருமானே
ஞாலத்தில் நல்லவழி நாம் நடக்க அருளிடைய்யா
என்றும் நாம் நிம்மதியுடன் வாழவழி தந்திடைய்யா
இணுவில் பதி கோயில் கொண்ட ஞானலிங்கேச்சுவரப் பெருமானே
மருதநிலச் சூழலிலே வந்துறையும் பெருமானே
மகிழ்ச்சியுடன் நாம் வாழ உரிய அருள் அருளிடைய்யா
என்றும் நாம் வளமுடன் வாழவழி தந்திடைய்யா
இணுவில் பதி கோயில் கொண்ட ஞானலிங்கேச்சுவரப் பெருமானே
மனவுறுதி தந்தெம்மை வழிநடத்தும் பெருமானே
மாண்பு மிகு பெருவாழ்வு வாழ நமக்கருளிடைய்யா
என்றும் மனநிறைவுடன் வாழவழி தந்திடைய்யா
இணுவில் பதி கோயில் கொண்ட ஞானலிங்கேச்சுவரப் பெருமானே
தமிழ் முழங்கும் திருமண்ணில் உறைகின்ற பெருமானே
தகைமையுடன் நாம் வாழ நல்வழியைக் காட்டிடைய்யா
என்றும் துணையாக இருந்தெம்மை வழி நடத்த வந்திடைய்யா
இணுவில் பதி கோயில் கொண்ட ஞானலிங்கேச்சுவரப் பெருமானே
யாழ்ப்பாணப் பெரு நிலத்தில் இருந்தருளும் பெருமானே
பாழ்படா நிலையின்றி வாழ வழி அருளிடைய்யா
என்றும் தலை நிமிர்ந்து வாழவழி தந்திடைய்யா
இணுவில் பதி கோயில் கொண்ட ஞானலிங்கேச்சுவரப் பெருமானே
இயற்கையையே இயக்குகின்ற உலகாளும் பெருமானே
இச்சையின்றி நேர்வழியில் வாழவழி காட்டிடைய்யா
என்றும் நேர்மையுடன் வாழவழி தந்திடைய்யா
இணுவில் பதி கோயில் கொண்ட ஞானலிங்கேச்சுவரப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.