மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம், நல்லதண்ணி, சிவனொளி பாதமலை – அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
சிவனாரின் திருமகனாய் வந்துதித்த பிள்ளையாரே
சீர்மைமிகு பெருவாழ்வை தந்தருள வேண்டுமைய்யா
துன்பமில்லா வாழ்வு தந்து துயர் களைந்து விட்டிடைய்யா
சிவனொளி பாதமலை கோயில் கொண்ட திருவருளே பிள்ளையாரே
மலை சூழ்ந்த திருவிடத்தில் இருந்தருளும் பிள்ளையாரே
வளம் கொண்ட வாழ்வுக்கு வழியமைத்து விட்டிடைய்யா
வீழ்ச்சியில்லா வாழ்வு தந்து உயர்ச்சி தந்து விட்டிடைய்யா
சிவனொளி பாதமலை கோயில் கொண்ட திருவருளே பிள்ளையாரே
சிவனாரின் அடி பதிந்த மலை அடியில் அமர்ந்தவரே பிள்ளையாரே
சிந்தையில் தெளிவு நிறை சீர்வாழ்வை அருளிடைய்யா
நேர்மை மிகு வாழ்வு தந்து எழுச்சி தந்து விட்டிடைய்யா
சிவனொளி பாதமலை கோயில் கொண்ட திருவருளே பிள்ளையாரே
வேல் தாங்கும் வேலவனின் மூத்தவனே பிள்ளையாரே
வேதனைகள் அண்டாமல் காத்தருள வேண்டுமைய்யா
வாழ்விலே உண்மை நெறி கைக்கொள்ளவழி தந்து விட்டிடைய்யா
சிவனொளி பாதமலை கோயில் கொண்ட திருவருளே பிள்ளையாரே
நம்பியடி தொழுதிடுவோரின் துணையிருக்கும் பிள்ளையாரே
நானிலத்தில் பெருமையுடன் வாழும் வழி தந்திடைய்யா
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நேர்வழியைக் காட்டிடைய்யா
சிவனொளி பாதமலை கோயில் கொண்ட திருவருளே பிள்ளையாரே
ஆற்றல் தந்து அரவணைக்கும் அற்புதனே பிள்ளையாரே
ஆதரித்து அரவணைத்துக் காத்திடவே வந்திடைய்யா
அஞ்சா நிலைபெற்று வாழும் பெரு நிலையைத் தந்திடைய்யா
சிவனொளி பாதமலை கோயில் கொண்ட திருவருளே பிள்ளையாரே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.