ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் – பதுளை – ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில்
கோலமயிலமர்ந்து கோலோஞ்சும் அருள்முருகா
தீராத துன்பங்களைத் தீர்த்திடவே வந்திடைய்யா
துணையிருந்து எங்களை நீ காத்தருள வேண்டுமைய்யா
பதுளையிலே அமர்ந்தருளும் வேலவனே உடனிருப்பாய்
குறத்திமகள் வள்ளியம்மை இணையாகக் கொண்டவனே அருள் முருகா
குவலயத்தில் நல்லருளைப் பொழிந்திடவே வந்திடைய்யா
குற்றங்களைப் பொறுத்தெம்மைக் காத்தருள வாருமைய்யா
பதுளையிலே அமர்ந்தருளும் வேலவனே உடனிருப்பாய்
தெய்வானைத் திருமகளை உடன் கொண்ட அருள் முருகா
தொல்லைகளைக் களைந்தெம்மைக் காத்தருள வந்திடைய்யா
துயரில்லா வாழ்வு தந்து காத்திடவே அருளிடைய்யா
பதுளையிலே அமர்ந்தருளும் வேலவனே உடனிருப்பாய்
சூரனை அடக்கி நலமளித்த அருள்முருகா
உளநலமும், உடல் நலமும் எமக்கு நீ தந்திடைய்யா
உறவுகள் இணைந்த வாழ்வு நிலை பெறவே துணையிருந்து அருளிடைய்யா
பதுளையிலே அமர்ந்தருளும் வேலவனே உடனிருப்பாய்
மலை சூழ்ந்த நற்பதியில் கோயில் கொண்ட அருள் முருகா
மாநிலத்தில் அமைதி நிற்க வழியமைத்துக் காத்திடைய்யா
மானமும், மரியாதையும் வாழ்வில் நிலைக்க வழி தாருமைய்யா
பதுளையிலே அமர்ந்தருளும் வேலவனே உடனிருப்பாய்
ஆழி சூழ் உலகினையே ஆட்டிவைக்கும் அருள் முருகா
அறிவுதந்து ஆற்றல் தந்து வாழும் வழி செய்திடைய்யா
அஞ்சாத மனம் தந்து நல்வாழ்வை எமக்காக்க வாருமைய்யா
பதுளையிலே அமர்ந்தருளும் வேலவனே உடனிருப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.