வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- இணுவில் / உரும்பிராய் அருள்மிகு கருணாகரப் பிள்ளையார் திருக்கோயில்
கருணை கொண்டு உலகாளும் தலைமகனே பிள்ளையாரே
கணமும் உடனிருந்து எமக்கருள வேண்டுமைய்யா
கடும் துன்பம் வரும் வேளை அருகிருந்து போக்கிடைய்யா
இணுவில் நற்பதியில் எழுந்தருளும் கருணாகரப் பிள்ளையாரே
இணுவில் உரும்பிராய் இருஊரின் மத்தியிலே கோயில் கொண்ட பிள்ளையாரே
இன்பநிலை தழும்பாமல் நாம்வாழ எமக்கருள வேண்டுமைய்யா
இன்னல் அண்டாமல் அருகிருந்து போக்கிடைய்யா
இணுவில் நற்பதியில் எழுந்தருளும் கருணாகரப் பிள்ளையாரே
வட இலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் பிள்ளையாரே
வற்றாத உன்கருணை எமக்கென்றும் வேண்டுமைய்யா
வெறுமை நிலை அண்டாமல் அருகிருந்து போக்கிடைய்யா
இணுவில் நற்பதியில் எழுந்தருளும் கருணாகரப் பிள்ளையாரே
அழகுமிகு திருக்கோயில் கொண்டுறையும் பிள்ளையாரே
அச்சமின்றி வாழும் நிலை எமக்கென்றும் வேண்டுமைய்யா
அநீதிகள் அண்டாமல் அருகிருந்து போக்கிடைய்யா
இணுவில் நற்பதியில் எழுந்தருளும் கருணாகரப் பிள்ளையாரே
கங்கையம்மை முடிகொண்ட சிவனாரின் புத்திரனே விநாயகரே
வேதனையில்லா நல்வாழ்வு எமக்கென்றும் வேண்டுமைய்யா
கொடும்பகைகள் அண்டாமல் அருகிருந்து காத்திடைய்யா
இணுவில் நற்பதியில் எழுந்தருளும் கருணாகரப் பிள்ளையாரே
தமிழரசர் ஆட்சி செய்த நன்னாட்டிலுறை பிள்ளையாரே
திகட்டாத உன் கருணை எமக்கென்றும் வேண்டுமைய்யா
திசை மாறும் நிலை அண்டாமல் அருகிருந்து காத்திடைய்யா
இணுவில் நற்பதியில் எழுந்தருளும் கருணாகரப் பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.