வடமாகாணம்- மன்னார் மாவட்டம் – அடம்பன்- மாந்தை மேற்கு வேட்டையான்முறிப்பு, அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில்
கருணை கொண்டு நல்வாழ்வளிக்கும் தாயே
கவலையின்றி வாழ அருள் தந்திடுவாய் அம்மா
திக்கெங்கும் நல்லருளைப் பரப்பிடவே வருவாய்
வேட்டையான் முறிப்பில் கோயில் கொண்ட இராஜராஜேஸ்வரி அம்மா
தூயவளே துயர் போக்கும் திருமகளே தாயே
துணை தந்து வாழவழி தந்திடுவாய் அம்மா
வரும் துன்பம் துரத்திடவே விரைந்து நீ வருவாய்
வேட்டையான் முறிப்பில் கோயில் கொண்ட இராஜராஜேஸ்வரி அம்மா
துணிவு தந்து தூயமனமும் தந்து அருளுகின்ற தாயே
துரத்திவரும் தீமைகளைத் தடுத்திடுவாய் அம்மா
திகைப்பில்லா வாழ்வுதர உடனிருக்க வருவாய்
வேட்டையான் முறிப்பில் கோயில் கொண்ட இராஜராஜேஸ்வரி அம்மா
ஆற்றல் தந்து ஆளுமை தந்து ஆதரிக்கும் தாயே
அசையாத மனவுறுதி தந்திடுவாய் அம்மா
அச்சங்களை அகற்றிடவே உடனிருக்க வருவாய்
வேட்டையான் முறிப்பில் கோயில் கொண்ட இராஜராஜேஸ்வரி அம்மா
மன்னார் பெருநிலத்தில் வந்துறையும் தாயே
மாண்புகுன்றா பெருவாழ்வை தந்திடுவாய் அம்மா
மானமுடன் நாம் வாழ உடனிருக்க வருவாய்
வேட்டையான் முறிப்பில் கோயில் கொண்ட இராஜராஜேஸ்வரி அம்மா
தாயாக இருந்துலகை ஆட்சி செய்யும் தாயே
தயக்கமில்லா நல் வாழ்வைத் தந்திடுவாய் அம்மா
துயரின்றி நாம் வாழ உடனிருக்க வருவாய்
வேட்டையான் முறிப்பில் கோயில் கொண்ட இராஜராஜேஸ்வரி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.