வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், உரும்பிராய் சிவகுல வீதி அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோயில்
உரும்பிராயில் கோயில் கொண்ட நாகபூசணி அம்மா
சுற்றமெல்லாம் நலன் பெறவே துணையிரம்மா
மாசற்ற அன்பு நிறை திருமகளே
மாண்புடனே வாழவழி தந்திடம்மா
நல்லவர்கள் போற்றுகின்ற நாகபூசணி அம்மா
தரணியெங்கும் காவல் செய்ய வந்திடம்மா
அன்புடனே அரவணைக்கும் திருமகளே
ஆற்றல் மிகு வாழ்வதனைத் தந்திடம்மா
எங்கும் நிறைந்திருக்கும் நாக பூசணி அம்மா
எங்களுக்கு நல்வாழ்வளிக்க வந்திடம்மா
ஆதரித்து அரவணைக்கும் திருமகளே
ஆட்சி செய்து கருணையையும் தந்திடம்மா
அறம் காத்து மறம் அழிக்கும் நாகபூசணி அம்மா
அநீதியண்டா வாழ்வினையே அளித்திடம்மா
செல்வநிலை தந்தருளும் திருமகளே
செம்மைமிகு நன்னிலையைத் தந்திடம்மா
உறுதி கொண்ட மனம் கொண்ட நாகபூசணி அம்மா
உயர் நிலையில் வாழவழி காட்டிடம்மா
ஆதரித்து அரவணைக்கும் திருமகளே
அச்சமின்றி வாழும் வழி தந்திடம்மா
தமிழ்த் தாயின் பெருமகளாய் வந்துதித்த நாகபூசணி அம்மா
தரணியிலே தலை நிமிர வழி செய்திடம்மா
அணைத் தெம்மை ஆட்கொள்ளும் திருமகனே
அறநெறியில் வாழும் வழி தந்திடம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
