ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம்- பண்டாரவளை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மலையகத்தின் நன்னகரில் இருந்தருளும் வேலவனே
மனக்குழப்பம் இல்லா நிலை தந்தருள வேண்டுமைய்யா
மாநிலத்தில் நிம்மதியாய் என்றும் வாழ்வதற்கு
ஏற்ற அருள் தருவாய் பண்டாரவளை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
அழகு திருவுரு கொண்ட அண்ணலே வேலவனே
அகந்தையில்லா மனம் தந்தருள வேண்டுமைய்யா
அச்சமில்லா அகிலத்தில் நிம்மதியாய் வாழ்வதற்கு
ஏற்ற அருள் தருவாய் பண்டாரவளை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
தேவியர் இருவருடன் காட்சி தரும் வேலவனே
திகட்டாத நல்வாழ்வைத் தந்தருள வேண்டுமைய்யா
திக்கெங்கும் அமைதி நிலை நிரந்தரமாய் நிலவுதற்கு
ஏற்ற அருள் தருவாய் பண்டாரவளை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
வேல்தாங்கி நின்றருளி வினை போக்கும் வேலவனே
வேதனைகள் அண்டாத பெருவாழ்வு தந்தருள வேண்டுமைய்யா
வளமான பெருவாழ்வு என்றுமே நிலைப்பதற்கு
ஏற்ற அருள் தருவாய் பண்டாரவளை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
தந்தைக்கு உபதேசம் செய்தவரே வேலவனே
தெளிவாக வழிநடத்தி வழிப்படுத்த வேண்டுமைய்யா
தொல்லையின்றி வாழ்வதற்கு
ஏற்ற அருள் தருவாய் பண்டாரவளை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே
தமிழ்த் தெய்வம் என்ற பெருமை கொண்ட வேலவனே
தரணியிலே தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டுமைய்யா
தோல்விநிலை நெருங்காமல் தமிழினத்தோர் வாழ்வதற்கு
ஏற்ற அருள் தருவாய் பண்டாரவளை கோயில் கொண்ட சிவசுப்பிரமணியப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.