ஐரோப்பா – இங்கிலாந்து வேல்ஸ் அருள்மிகு கந்தவேள் முருகன் திருக்கோயில்
குன்று தோறும் இருந்தருளும் குமரைய்யா
குலம் வாழ உன்னருளைத் தந்தருள வாருமைய்யா
குறைவில்லா நிறை வாழ்வை எமக்கருள்வாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட கந்தவேள் முருகைய்யா
விநாயகருக்கிளையோனாய் வந்துதித்த குமரைய்யா
வெற்றி முகம் தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா
வீரமிகு பெருவாழ்வை எமக்கருள்வாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட கந்தவேள் முருகைய்யா
வேல்ஸ் மாநிலத்தில் இடம் கொண்ட குமரைய்யா
வேதனைகளில்லாத வாழ்வளிக்க வாருமைய்யா
வெறுப்பில்லா நல் மனதை எமக்கருள்வாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட கந்தவேள் முருகைய்யா
தேடிவந்து உன்பாதம் சரணடைந்தோம் முருகைய்யா
தேசமெங்கும் நல்லருளைப் பரப்பிடவே வாருமைய்யா
தோல்வியில்லாப் பெருவாழ்வை எமக்கருள்வாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட கந்தவேள் முருகைய்யா
வளங்கொண்ட மலை நிலத்தில் வீற்றிருக்கும் குமரைய்யா
வணங்கி நிற்கும் எங்களை வாழவைக்க வாருமைய்யா
வேதனையில்லா வெற்றியையே எமக்கருள்வாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட கந்தவேள் முருகைய்யா
அம்மையப்பன் இளமகனாய் அவதரித்த முருகைய்யா
அச்சமில்லா வாழ்வு தந்து அணைத்தருள வாருமைய்யா
இப்புவியில் தலைதாழா வாழ்வையே எமக்கருள்வாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட கந்தவேள் முருகைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.