வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம் – அனுராதபுரம் புதிய நகரம் – அருள்மிகு கதிரேசன் திருக்கோயில்
மயிலேறி உலகளந்த மாமணியே
மாநிலத்தில் நல்லருளை நிறுவிடைய்யா
கேட்கும் வரம் தந்திடைய்யா கதிரேசா
அனுராதபுரமமர்ந்த சிவன் மகனே அருளிடைய்யா
வெற்றிவேல் தாங்கி நிற்கும் மாமணியே
வேதனைகள் அண்டாவழி அருளிடைய்யா
வரம் கேட்டு உன்னடியை நாம் பணிந்தோம் கதிரேசா
அனுராதபுரமமர்ந்த சிவன் மகனே அருளிடைய்யா
ஆறுமுகம் கொண்டருளும் மாமணியே
ஆறுதலைத் தந்தருள வாருமைய்யா
பாடிப் பணிந்துன்னைப் போற்றுகின்றோம் கதிரேசா
அனுராதபுரமமர்ந்த சிவன் மகனே அருளிடைய்யா
எல்லாள மாமன்னன் ஆண்ட நிலம் வந்துறையும் மாமணியே
எத்திக்கும் தமிழ் மணக்கச் செய்திடைய்யா
போற்றிப் பணிந்துன்னை வணங்குகின்றோம் கதிரேசா
அனுராதபுரமமர்ந்த சிவன் மகனே அருளிடைய்யா
தமிழ்த் தெய்வ மென்ற புகழ் கொண்ட மாமணியே
தவறில்லா நல்லாழ்வைத் தாருமைய்யா
தமிழால் உனைப்பாடித் தொழுகின்றோம் கதிரேசா
அனுராதபுரமமர்ந்த சிவன் மகனே அருளிடைய்யா
கொடுமைகளைக் களைந்தெறியும் மாமணியே
வெற்றிமிகு நல்வாழ்வை தந்திடைய்யா
வேலவனே உன்னடியைச் சரணடைந்தோம் கதிரேசா
அனுராதபுரமமர்ந்த சிவன் மகனே அருளிடைய்யா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.