மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம், தலவாக்கலை, அருள்மிகு அருள் முருகன் திருக்கோயில்
மலை சூழ்ந்த திருவிடத்தில் கோயில் கொண்ட வேல்முருகா
மலைப்பில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
மாண்புடனே நாம் வாழ வழியமைத்துத் தந்திடுவாய்
தலவாக்கலை இருந்தருளும் தயாளனே அருள்முருகா
அறம் காத்து அருளளிக்க அவதரிக்கும் வேல்முருகா
அணைத்தருளி எமக்கென்றும் நல்வாழ்வு தாருமைய்யா
அச்சமின்றி நாம்வாழ வழிகாட்டி விட்டிடுவாய்
தலவாக்கலை இருந்தருளும் தயாளனே அருள்முருகா
தந்தைக்கு உபதேசம் செய்தவரே வேல்முருகா
தவறில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
தடுமாறா நிலைதந்து வழியமைத்துத் தந்திடுவாய்
தலவாக்கலை இருந்தருளும் தயாளனே அருள்முருகா
வேல்தாங்கி நின்றிருந்து வினை போக்கும் வேல்முருகா
வேதனைகள் அண்டாத சுகவாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
வையகத்தில் வாழ்வாங்கு வாழ வழியமைத்துத் தந்திடுவாய்
தலவாக்கலை இருந்தருளும் தயாளனே அருள்முருகா
அன்னையர் இருவரையும் அருகு கொண்ட வேல்முருகா
அஞ்சாத நிலை கொண்ட நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
ஆணவம் தடுத்தெம்மை அறவழியில் வாழும் வழி தந்திடுவாய்
தலவாக்கலை இருந்தருளும் தயாளனே அருள்முருகா
அச்சமின்றி யெமக்கு அருள் வழங்கும் வேல்முருகா
ஆதரவு தந்து எமக்கருள வேண்டுமைய்யா
ஒன்றுபட்டு நாம்வாழ உரிய வழி தந்திடுவாய்
தலவாக்கலை இருந்தருளும் தயாளனே அருள்முருகா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.