சப்பிரகமுவ மாகாணம்- கேகாலை மாவட்டம் – எட்டியாந்தோட்டை நகர் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்
மயிலேறி உலகளந்த மாமணியே முருகைய்யா
மாசற்ற மனம் கொண்டு வாழ வைக்கவே வருவாய்
திடங்கொண்ட மனத்துடனே என்றும் நாம் வாழ
அருள் தந்து ஆதரிப்பாய் எட்டியாந்தோட்டை கோயில் கொண்ட கதிர்வேலாயுதப் பெருமானே
மலை சூழ்ந்த நன்னகரில் கோயில் உறை முருகைய்யா
மாண்பு குன்றா வாழ்வுடனே நாம் வாழ அருள்வாய்
வெற்றி கொண்ட வாழ்வை என்றும் நாம் பெற்றுவாழ
அருள் தந்து ஆதரிப்பாய் எட்டியாந்தோட்டை கோயில் கொண்ட கதிர்வேலாயுதப் பெருமானே
அறம் காத்து தரணியையே ஆளுகின்ற முருகைய்யா
ஆதரித்து அரவணைத்து வாழவைக்கவே வருவாய்
மகிழ்வு கொண்ட மனத்தினராய் என்றும் நாம் வாழ
அருள் தந்து ஆதரிப்பாய் எட்டியாந்தோட்டை கோயில் கொண்ட கதிர்வேலாயுதப் பெருமானே
ஆறுமுகம் கொண்டமர்ந்து கருணை தரும் முருகைய்யா
ஆர்ப்பரித்து வந்தெம்மை வாழவைக்கவே வருவாய்
ஏற்றமிகு பெருவாழ்வை என்றும் நாம் பெற்றுவாழ
அருள் தந்து ஆதரிப்பாய் எட்டியாந்தோட்டை கோயில் கொண்ட கதிர்வேலாயுதப் பெருமானே
செல்வச்சந்நிதியில் அன்னதானக் கந்தனென பெயர் பெற்ற முருகைய்யா
சோர்வில்லாப் பெருவாழ்வை நல்கிடவே வருவாய்
தலைதாழா நிலை பெற்று நாம் என்றும் வாழ
அருள் தந்து ஆதரிப்பாய் எட்டியாந்தோட்டை கோயில் கொண்ட கதிர்வேலாயுதப் பெருமானே
தந்தைக்கு உபதேசம் செய்தவனே முருகைய்யா
தரணியிலே தலைநிமிர்ந்து வாழவைக்கவே வருவாய்
தரணியெங்கும் தமிழ்மொழி தளராது ஒலித்து என்றும் வாழ
அருள் தந்து ஆதரிப்பாய் எட்டியாந்தோட்டை கோயில் கொண்ட கதிர்வேலாயுதப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.